அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கொண்ட அறிக்கையை அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் அதிகளவிலான சரிவை எதிர்கொண்டது. இதனால் பல லட்சம் ரீடைல் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை இழந்தனர்.
இதுகுறித்து உச்சநீதிமன்றம் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து தற்போது செபி உச்ச நீதிமன்றத்தில் அதானி - ஹிண்டன்பெர்க் ரிசர்ச் தொடர்பான வழக்கு குறித்து சுமார் 41 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில் தற்போது சந்தை கட்டுப்பாட்டாளரான செபி உச்ச நீதிமன்றத்திடம் இருந்து உரிய உத்தரவை பெற காத்திருக்கிறது. இந்த வழக்கு தொடர்பாக செபி வைத்த கோரிக்கையை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
அதானி ஹிண்டன்பர்க் விசாணையில் உச்ச நீதிமன்றம் நியமித்த வில்லுனர்கள் குழு பத்திர சந்தையின் விதிமீறல்கள் மீது முறையாக நடவடிக்கை எடுத்து இச்சந்தையின் ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுப்ரீம் கோர்ட் அதானி ஹிண்டன்பர்க் விவகாரத்தின் விசாரணையை ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் செபி தனது அறிக்கையில் 2019ல் ஆப்ஷோர் பண்ட்ஸ் குறித்து செபியிடம் விபரங்களை சமர்ப்பிப்பதில் செய்யப்பட்ட மாற்றங்கள் மூலம், நிதி ஆதாரங்களின் விபரங்களை திரட்டுவதில் பெரிய பிரச்சனை இருக்காது என விளக்கம் கொடுத்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் மார்ச் மாதம் நியமித்த வல்லுநர்கள் குழு கடைசியாக சமர்ப்பித்த அறிக்கையில் ஆய்வு செய்து வெளியிட்ட அறிவிப்பில், தற்போது திரட்டப்பட்டு உள்ள விபரங்கள், ஆதாரங்களை வைத்து அதானி குழுமம் பங்கு இருப்பு, பங்கு விலையில் முறைகேடு செய்துள்ளதாக அறிவிக்க முடியாது என தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து செபி திங்கட்கிழமை சமர்ப்பித்த அறிக்கையில் வல்லுநர்கள் குழு வழக்கிற்கான தீர்வுகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்காகக் கொள்கைகளை வகுத்துள்ளது எனத் தெரிவித்துள்ளது. மேலும் செபி பல விஷயங்களைக் கவனித்துள்ளதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications