அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இது மட்டும் அல்லாமல் இந்த விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்களை மட்டும் அல்லாமல் சர்வதேச முதலீட்டாளர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ள அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து வேகமாக விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
இந்த 2 மாத விசாரணையின் முடிவுகள் அதானி குழும பங்குகளின் நிலையை பெரிய அளவில் பாதிக்கும் என்பதால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வரையில் செபியின் விசாரணையை உற்று நோக்கும்.
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம்
அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஏற்கனவே ஹிண்டன்பர்க் அறிக்கையின் குற்றச்சாட்டுகள் மற்றும் அறிக்கையை வெளியிடுவதற்கு முந்தைய சந்தை செயல்பாடுகள் மற்றும் விதி மீறல்களைக் கண்டறியும் வகையில் ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாக இன்றைய சுப்ரீம் கோர்ட் விசாரணையில் பெஞ்ச் குறிப்பிட்டது. செபி அதன் விசாரணையின் நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரிவிடப்பட்டு உள்ளது.
செபி-க்கு உத்தரவு
தற்போது நடந்துவரும் விசாரணையின் ஒரு பகுதியாக, செபி 3 முக்கியமான விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது. இந்த 3 முக்கியமான விஷயத்தை அடிப்படையாக கொண்டு தான் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது 2 அறிக்கையிலும் பல குற்றசாட்டுகளை அடுக்கியது.
3 முக்கியமான விஷயம்
1. பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகளின் விதி 19(a) மீறல் உள்ளதா;
2. சட்டத்தின்படி SEBI க்கு தொடர்புடைய தரப்பினருடன் தொடர்புடைய கட்சிகளுடனான பரிவர்த்தனைகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை வெளியிடுவதில் தோல்வி அடைந்ததா;
3. ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு முரணாக பங்கு விலைகளில் ஏதேனும் கையாளுதல் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
SEBI விசாரணை
தற்போதைய விசாரணையின் வரையறைகளை மட்டுப்படுத்த மேற்கண்ட வழிகாட்டுதல்கள் கீழ் கட்டுப்படுத்தப்படாது, அனைத்து பிரிவுகளிலும் செபிக்கு விசாரணை செய்ய உரிமை உண்டு. SEBI தனது விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் விரைவாக முடித்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.
நிபுணர் குழு
அதானி-ஹிண்டன்பர்க் பிரச்சினையின் ஒழுங்குமுறை விதிமீறல்களை அனைத்து தரப்பினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் வெளிப்படையாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவையும் நீதிமன்றம் அமைத்தது, இதன் உறுப்பினர்கள் பெயரையும் வெளியிட்டு உள்ளது.
இந்த குழுவில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய பென்ச் கீழ் உறுப்பினர்களாக ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், நந்தன் நிலகேணி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரேயின் தலைமையில் செயல்படும்.
முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பு
கடந்த சில வாரங்களாக அதானி குழும நிறுவன பங்குகள் பெரிய அளவிலான சரிவை சந்தித்தது. இதன் காரணமாக முதலீட்டாளர்களின் முதலீட்டு மதிப்பில் ஏற்பட்ட இழப்பு குறித்தும் வழக்குகள் சம்பந்தப்பட்டவை என்று பெஞ்ச் குறிப்பிட்டது. அதானி குழுமப் பங்குகளில் ஷாட் பொசிஷன் வைத்துள்ளதாக ஏற்கனவே ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பு கூறியதையும் பெஞ்ச் குறிப்பிட்டது.
ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்திய முதலீட்டாளர்களை சந்தை தடுமாற்றத்தில் இருந்து பாதுகாக்க, ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க 17 பிப்ரவரி 2023 அன்று நீதிமன்றம் முடிவு செய்தது.
மத்திய அரசு பரிந்துரை
17 பிப்ரவரி 2023 நீதிமன்றம் முடிவின் படி திட்டமிடப்பட்ட நிபுணர் குழுவில் சேர்ப்பதற்காக சீல் செய்யப்பட்ட கவரில் மத்திய அரசு சில முக்கியமானவர்களின் பெயர்களை அளித்தது. இதை ஏற்க சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் மறுத்தது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சந்திரசூட் அதிரடி
சுப்ரீம் கோர்ட் அமைக்கும் நிபுணர் குழுவில் நிபுணர்களைத் தேர்ந்தெடுத்து, முழு வெளிப்படைத்தன்மை உடன் செய்ய உள்ளோம். நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெயர்களை எடுத்தால், அது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவாக இருக்கும். குழுவின் மீது முழு (பொது) நம்பிக்கை இருக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் உத்தரவுகளை வெளியிடும் முன் வாய்மொழியாகக் அறிவித்தார்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications