அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
அதானி குழுமத்திற்கு எதிரான ஹிண்டன்பர்க் ஆய்வு அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, இந்திய முதலீட்டாளர்களை சந்தை ஏற்ற இறக்கங்களில் இருந்து பாதுகாக்க, ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டுமா என்பதை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க 17 பிப்ரவரி 2023 அன்று நீதிமன்றம் முடிவு செய்தது.
இந்த நிபுணர் குழுவில் யாரை நியமிப்பது என்பதில் மத்திய பரிந்துரையை ஏற்க மறுத்த நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பென்ச் வெளிப்படையாக 6 உறுப்பினர்கள் பெயரை அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற நிபுணர் குழு
17 பிப்ரவரி ஆம் தேதி உச்சநீதிமன்றம் முடிவின் படி திட்டமிடப்பட்ட நிபுணர் குழுவில் சேர்ப்பதற்காக சீல் செய்யப்பட்ட கவரில் மத்திய அரசு சில முக்கியமானவர்களின் பெயர்களை பிரிந்துரை செய்து அளித்தது. இதற்கு நீதிபதி சந்திரசூட் நாங்கள் அரசாங்கத்திடம் இருந்து பெயர்களை எடுத்தால், அது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவாக இருக்கும். குழுவின் மீது முழு நம்பிக்கை இருக்க வேண்டும் என்று கூறி மறுத்துவிட்டார்.
5 பேர்
இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய பென்ச் கீழ் இயக்கும் நிபுணர் குழு உறுப்பினர்களாக ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், நந்தன் நிலகேணி, கே.வி.காமத், சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிபுணர் குழு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரேயின் தலைமையில் செயல்படும். இவருடன் சேர்த்தால் மொத்தம் 6 பேர் கொண்ட குழு.
யார் இவர்கள்..?
ஓ.பி.பட் - ஓம் பிராகாஷ் பட் முன்னாள் எஸ்பிஐ சேர்மன் ஆவார், தற்போது ONGC, டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் உள்ளார்.
ஜே.பி.தேவதத் - ஓய்வுபெற்ற நீதிபதி
நந்தன் நிலகேணி - இன்போசிஸ் இணை நிறுவனர், ஆதார் தளத்தை உருவாக்கியவர்.
கே.வி.காமத் - BRICKS, ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் Independent director.
சோமசேகரன் சுந்தரேசன் - மத்திய அரசு, செபி, ஆர்பிஐ அமைத்திருக்கும் பல நிதியியல் மற்றும் கார்பரேட் விவகாரத்துறை சட்டம் இயற்றும் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
ஏ.எம்.சப்ரே - அபய் மனோகர் சப்ரே உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். அவர் முன்னதாக 19 அக்டோபர் 2013 முதல் ஆகஸ்ட் 12, 2014 வரை கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும், மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதியாகவும் 23 மார்ச் 2013 முதல் 18 அக்டோபர் 2013 வரை பணியாற்றினார்.
உச்சநீதிமன்றம் உத்தரவு
உச்சநீதிமன்றம் இன்று வெளியிட்டு உள்ள உத்தரவில் அடுத்த 2 மாதத்தில் அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரிப்பது மட்டும் அல்லாமல் 3 முக்கிய விஷயத்தின் கீழ் தனிப்பட்ட முறையில் விசாரணை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.
3 முக்கியமான விஷயம்
அதானி குழுமம் பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகளின் விதி 19(a) மீறல் உள்ளதா, சட்டத்தின்படி SEBI க்கு தொடர்புடைய தரப்பினருடன் தொடர்புடைய கட்சிகளுடனான பரிவர்த்தனைகள் மற்றும் பிற தொடர்புடைய தகவல்களை வெளியிடுவதில் தோல்வி அடைந்ததா, ஏற்கனவே உள்ள சட்டங்களுக்கு முரணாக பங்கு விலைகளில் ஏதேனும் கையாளுதல் செய்யப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications