அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து அமெரிக்காவின் மிகப்பெரிய ஷாட் செல்லராக இருக்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு உள்ள சில மொரிஷியஸ் நிறுவனங்களில், 2 நிறுவனங்களை கடந்த 10 வருடமாக இந்திய வருமான வரி துறை காண்காணித்து, விசாரணை செய்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 3 மாத அவகாசம் கொடுத்துள்ளது. இந்த கால அவகாச மனுவை விசாரித்த போது, செபி அதானி குழுமம் பங்குகளின் அளவுகள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 11 வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களை அணுகியுள்ளதாக SEBI சுப்ரீம் கோர்ட்-ல் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு வெளியான பேரடைஸ் பேப்பர்ஸ் விசாரணை தரவுகளின் படி, செப்டம்பர் 2012ல் மொரிஷியஸ் வருவாய் துறை, இந்தியா - மொரிஷியஸ் நாடுகள் மத்தியிலான நேரடி வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் முதலீடு, நிதி ஆதாரம் குறித்த தகவல்களை இந்திய வரி அதிகாரிகளுக்கு பகிர Mavi Investment Fund என்னும் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. Mavi Investment Fund-ன் இப்போதைய பெயர் APMS Investment Fund.
இதேபோல் மொரிஷியஸ்-ஐ சேர்ந்த Lotus Global Investment நிறுவனம் 2005 முதல் அதானி குரூப் நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறது. இந்த நிறுவனத்திற்கும் ஜூலை 2014ல் மொரிஷியஸ் வருவாய் துறை இந்திய வரி துறைக்கு தகவல் பகிர நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில், 5 மொரிஷியஸ் நிறுவனங்கள் அதானி குழுமத்தில் குறிப்பிடத்தக்க அளவிலான பங்குகளை வைத்துள்ளது எனவும், சுமார் 15 வருடங்களாக முதலீடு செய்து அதானி பங்குகளை சேர்த்துள்ளது எனவும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த 5 நிறுவனங்கள் பட்டியலில் APMS Investment Fund, Albula Investment Fund, Cresta Fund, LTS Investment Fund, மற்றும் Lotus Global Investment ஆகிய நிறுவனங்களை stock parking entity ஆக செயல்படுகிறது என குற்றம்சாட்டியது.

மேலும் சுப்ரீம் கோர்ட் அமைத்த சிறப்பு குழு வெளியிட்ட அறிக்கையில் செபி அக்டோபர் 2020 முதல் செபி கண்காணித்து வரும் 13 வெளிநாட்டு நிறுவனங்களில் இந்த 5ல் 4 நிறுவனங்கள் உள்ளது என தெரிவித்துள்ளது. தற்போது பிரச்சனை என்னவெனில் இந்த 13 வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர் யார், இந்த நிறுவனங்களுக்கான நிதி ஆதாரம் எப்படி, எங்கிருந்து வந்தது என தெரியாமல் இருப்பது தான்.
இதில் முக்கியமாக Mavi Investment Fund (இப்போதைய பெயர் APMS Investment Fund) நிறுவனம் மே 2010ல் செபிக்கு விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
APMS Investment Fund நிறுவனம் அதானி டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தில் 1.86 சதவீத பங்குகளும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 2.72 சதவீத பங்குகளும் வைத்துள்ளது. 2021 வரையில் அதானி கீரின் எனர்ஜி நிறுவனத்தில் 1.19 சதவீத பங்குகளை வைத்திருந்தது. மேலும் 2006 முதல் அதானி எண்டர்பிரைசர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து வந்த APMS Investment Fund நிறுவனம் கடந்த ஆண்டு மொத்தமாக விற்பனை செய்தது.
2013ல் மாவி இன்வெஸ்ட்மென்ட் பண்ட் எனப்படும் APMS Investment Fund நிறுவனம் அதானி பவர் பங்குகளை மொத்தமாக வினோத் அதானிக்கு 3 பிளாக் டீல் வாயிலாக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது என இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டு உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications