ஒட்டுமொத்த இந்தியாவும் பல மாதங்களாகக் காத்திருக்கும் ஒரு விஷயம் அதானி - ஹிண்டன்பெர்க் வழக்கின் தீர்ப்பு தான். இவ்வழக்கின் விசாரணையை நீதிமன்றம் இன்று, நாளை எனத் தொடர்ந்து ஒத்திவைத்து வரும் வேளையில் தலைமை நீதிபதி DY சந்திரசூட் வைத்த கடைசிக் கெடு கொடுத்துள்ளார்.
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் புதன்கிழமைக்குள் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டார். நீதிபதி சந்திரசூட்-ன் திடீர் அறிவிப்புக்கு முக்கியக் காரணம் உள்ளது.

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் பலமுறை ஒத்திவைக்கப்படுவதாகவும், மனுதாரர்கள் இவ்வழக்கை விசாரிக்கப் பல மறை முயற்சித்து வருவதாகவும் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறினார். இதற்குப் பதிலளிக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் புதன்கிழமைக்குள் இறுதி அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு பிரசாந்த் பூஷன் கோரிக்கைக்குத் தலைமை நீதிபதி பதிலளித்தார்.
அதானி-ஹிண்டன்பர்க் வழக்கில் மனுதாரர் ஒருவரின் சார்பில் பிரசாந்த் பூஷன் ஆஜரானார், அப்போது இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் ஆகஸ்ட் 28ஆம் தேதி விசாரணை செய்யப் பட்டியலிடப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாகவும் பிரசாந்த் பூஷன் கூறினார்.
இதோடு தலைமை நீதிபதி (CJI) DY சந்திரசூட், அதானி-ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பாக அரசு 2 பக்க அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும், இது தொடர்பாகவும் விசாரிக்க உத்தரவிட்டார். இதன் மூலம் புதன்கிழமை வரையில் அரசு, செபி உட்பட அனைத்து தரப்பினருக்கும் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
இந்த இறுதி அறிக்கையைப் பெற்ற பின்பு சுப்ரீம் கோர்ட் வழக்கைப் பட்டியலிட்டு விசாரணையைத் துவங்கும். கடைசியாகச் செபி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications