அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 6 மாதம் கூடுதல் அவகாசம் செபி கேட்டு மனு கொடுத்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், செபி-க்கு கூடுதலாக 3 மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால் செபி குறைந்தது 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என பதில் மனு கொடுத்து கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை விசாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செபியின் 6 மாத கால அவகாச கோரிக்கையை ரத்து செய்து வெள்ளிக்கிழமை அறிவித்த 3 மாத அவகாசம் அடிப்படையில் ஆகஸ்ட் 14 ஆம் தேதி செபி அதானி குழுமம் குறித்து அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவை விடுத்த போது நீதிபதிகள் ஏற்கனவே கொடுத்த 2 மாதம், தற்போது கொடுக்கப்பட்டு உள்ள கூடுதலான 3 மாதம் சேர்த்தால் மொத்தம் 5 மாதம் அவகாசம் கிடைத்துள்ளது என செபி தரப்பிடம் தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த சில வருடங்களாக அதானி குழும பங்குகள் ஒரு வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது குறித்து பல புகார்கள் அளிக்கப்பட்ட போதும் செபி எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என பிரபல வழக்கறிஞர் பிரசாத் பூஷன் நிதீமன்றத்தில் தெரிவித்தார்.
திங்கட்கிழமை 6 மாத கால அவகாசம் குறித்து செபியின் மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்கும் முன்பு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் -யிடம் செபி சில முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளது.

பொது சந்தையில் இருக்கும் அதானி குழும பங்குகளின் அளவுகள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 11 வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களை ஏற்கனவே அணுகியுள்ளதாக SEBI சுப்ரீம் கோர்ட்-ல் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
செபி தற்போது International Organization of Securities Commissions உடன் செய்யப்பட்டு உள்ள பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் SEBI ஏற்கனவே பதினொரு வெளிநாட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்களை அணுகி பல்வேறு தகவல் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன. மேலும் செபி தனது முதல் தகவல் கோரிக்கையை வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களுக்கு அக்டோபர் 6, 2020 அன்று வைத்தது என செபி உச்ச நீதிமன்றம் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications