அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் இந்திய பங்குசந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தாக்கல் செய்த புதிய விசாரணை அறிக்கையை செப்டம்பர் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் பரிசீலிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விவரங்களின்படி, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் செபி சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கைகளை வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கையில் செபி எதை கண்டுப்படித்துள்ளது என்பதை வெளிப்படையாக பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மட்டுமே தெரிவித்துள்ளது.
செபியின் சமீபத்திய விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக தெரிகிறது. SEBI அமைப்பு முதலில் அதானி குரூப் செய்த 13 பரிமாற்றங்களின் விதிமீறல்கள் குறித்தும், 12 வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்களின் பரிமாற்றம் குறித்து செபி விசாரணை செய்தது குறிப்பிடத்தக்கது.
செபியின் விசாரணை அறிக்கையை சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் 29 ஆம் தேதி விசாரிக்க திட்டமிட்ட நிலையில், அந்த நாளில் இந்திய சட்டம் 370 பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிக்கும் பணி அதிகமாக இருந்த காரணத்தால் விசாரணை நடைபெறவில்லை.
இந்த நிலையில் செப்டம்பர் 15 ஆம் தேதி இந்த விசாரணை நடக்க உள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications