அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-க்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை கூடுதல் அவகாசம் கேட்டது.
இந்த மனுவை விசாரணை செய்ய நீதிபதிகள், செபி-க்கு கூடுதலாக 3 மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால் செபி குறைந்தது 6 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை பரிசீலிப்பதாக ஒத்திவைத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று செபியின் மனுவை விசாரிக்கும் முன்பு, தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் -யிடம் செபி சில முக்கியமான விளக்கத்தை கொடுத்துள்ளது.
பொது சந்தையில் இருக்கும் அதானி குழுமம் பங்குகளின் அளவுகள் தொடர்பாக ஏதேனும் விதிமுறைகளை மீறியுள்ளதா என்பதை ஆய்வு செய்ய 11 வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களை ஏற்கனவே அணுகியுள்ளதாக SEBI சுப்ரீம் கோர்ட்-ல் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட ஒரு நிறுவனம் குறிப்பிட்ட அளவிலான பங்குகளை அரசின் விதிமுறைகளுக்கு இணங்க பொது சந்தையில் இருக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறி அதானி குழுமத்தின் நிறுவன பங்குகளை கௌதம் அதானி அவரது சகோதரர் வாயிலாக விதிமுறைக்கு மீறி அதிக இருப்பு வைத்திருக்கும் காரணத்தால் இப்பங்குகள் விலை அதிகரித்துள்ளது என ஹிண்டன்பர்க குற்றம்சாட்டியது.
இந்த குற்றச்சாட்டின் உண்மை தன்மையை விசாரணை செய்ய செபி தற்போது International Organization of Securities Commissions உடன் செய்யப்பட்டு உள்ள பலதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் SEBI ஏற்கனவே பதினொரு வெளிநாட்டு பங்குச்சந்தை கட்டுப்பாட்டாளர்களை அணுகி பல்வேறு தகவல் குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் செபி தனது முதல் தகவல் கோரிக்கையை வெளிநாட்டு கட்டுப்பாட்டாளர்களுக்கு அக்டோபர் 6, 2020 அன்று வைத்தது என செபி உச்ச நீதிமன்றத் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது.
மேலும் செபி தனது அறிக்கையில் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட 51 நிறுவனங்கள், உலகளாவிய டெபாசிட்டரி ரெசிபிட் வழங்கியது குறித்து விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையை முடிந்ததும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இதில் அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனமும் இந்த 51 நிறுவனங்களின் பட்டியலில் இல்லை.
இந்த 51 நிறுவனங்களின் விசாரணை நடவடிக்கையை மேற்கோள் காட்டி 2016 ஆம் ஆண்டு முதல் செபி அதானி குழுமத்தை விசாரணை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் 'உண்மையில் ஆதாரமற்றவை' என்று செபி உச்ச நீதிமன்றத் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியுள்ளது விளக்கம் கொடுத்துள்ளது.
கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் வெளியிட்ட ஒழுங்குமுறை அறிவிப்புகள் குறைபாடுகள் பற்றிய விசாரணையில் எந்தவொரு தவறான அல்லது முன்கூட்டியே முடிவும் நீதியின் நலனுக்கு எதிராகவும், சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாததாகவும் இருக்கும் என்று இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமாக SEBI திங்களன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications