சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை முடிந்ததுள்ளது. ஒட்டுமொத்த பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் எதிர்பார்த்து காத்திருந்த தருணம் வந்துள்ளது, செபி ஆகஸ்ட் 14 ஆம் தேதி 15 நாள் அவகாசம் கேட்ட நிலையில் தற்போது அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை முடித்து அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அமெரிக்க ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது அறிக்கையில் குறிப்பிட்டு அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான ஓட்டையே போட்டது.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து செமி விசாரித்து வந்த நிலையில், சுப்ரீம் கோர்ட் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தின் மக்கள் அதிகப்படியான முதலீட்டை இழந்துள்ளாதால் மக்களின் முதலீட்டை அடிப்படை காரணிகளாக வைத்து சுப்ரீம் கோப்ட் செபியின் விசாரணையின் போக்கை மாற்றியது.
இது மட்டும் அல்லாமல் செபியின் விசாரணையின் போக்கு, முடிவுகள் ஆகியவற்றை கணிக்க சிறப்பு குழுவையும் சுப்ரீம் கோர்ட் நியமித்தது. இந்த நிலையில் செபியின் விசாரணை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி இன்று அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையின் அறிக்கைய சமர்ப்பித்துள்ளது, இந்த அறிக்கையில் செபி எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் செபியின் விசாரணை அறிக்கையின் படி அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக ரெயூட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் செபியின் முந்தைய மனு மற்றும் இந்த அறிக்கை என அனைத்தையும் முன்பு திட்டமிட்டப்படி ஆகஸ்ட் 29 ஆம் தேதி விசாரிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications