அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த விசாரணையை பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி முடித்து ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி 24 பரிமாற்றத்தில் 22 பரிமாற்றங்களின் விசாரணையை முடித்து அறிக்கையை சுப்ரீம் கோர்ட்டில் சமர்பித்தது. இந்த விசாரணை அறிக்கை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நடக்க இருக்கும் காரணத்தால் அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்த சில தகவல்களை ரெயூட்டர்ஸ் வெளியிட்டு உள்ளது.
செபி அமைப்பு தனது விசாரணையில் எதை கண்டுப்படித்துள்ளது என்பதை பட்டியலிடாமல் விசாரணையில் கண்டுப்பிடிக்கப்பட்ட விபரங்கள் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டுமே தெரிவித்துள்ளது. முழுமையான விபரம் இன்று நடக்கும் சுப்ரீம் கோர்ட் விசாரணையில் தெரிய வரும்.

இந்த நிலையில் ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை செபியின் விசாரணையில் அதானி குழுமம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் செபிக்கு அளிக்க வேண்டிய தகவல்களில் விதிமீறல்களையும், வெளிநாட்டு நிறுவனங்களில் இருக்கும் பங்கு விபரம் குறித்தும் மறைத்துள்ளதை கண்டுப்படித்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
விசாரணையின் இறுதியில் அதானி குழுமம் செய்த இந்த விதிமீறல்களுக்கு அதிகப்படியாக பணமாக அபராதம் விதிக்கப்படுமே தவிர பெரிய அளவிலான நடவடிக்கை எடுக்கப்படாது என எதிர்பார்ப்பதாக பெயர் வெளியிட விரும்பாத 2 அதிகாரிகள் தெரிவித்ததாக ரெயூட்டர்ஸ் பத்திரிக்கை கூறியுள்ளது.
அதானி குழுமம் - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்து செபியின் விசாரணையை சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழு தீவிரமாக ஆய்வு செய்து வருகிறது. இன்று செபி அறிக்கை மீது விசாரணை நடக்க உள்ளது, ஒவ்வொரு விதிமீறல்களுக்கும் அதிகப்படியாக 1 கோடி ரூபாய் வரையிலான அபராதம் விதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications