இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மட்டும் அல்லாமல் உலகளவிலான பட்டியலிலும் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த கௌதம் அதானியின் சொத்து மதிப்பும், அதானி குழுமத்தின் சந்தை மதிப்பும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட ஒரு அறிக்கையின் காரணமாக பெரிய ஓட்டையை உருவாக்கியது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை காரணமாக அதானி குழுமம் 100 பில்லியன் டாலர் மதிப்பீட்டையும், கௌதம் அதானி கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான சொத்து மதிப்பையும் இழந்துள்ளார். இந்த மோசமான நிலைக்கு காரணமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையின் குற்றச்சாட்டுகளின் உண்மையை ஆராய சுப்ரீம் கோர்ட் செபி அமைப்பிற்கு ஆய்வு செய்ய உத்தரவிட்டது.

அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து பங்குசந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விசாரணையை முடித்தது ஆக்ஸ்ட் 25 ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பித்தது. சுப்ரீம் கோர்ட் வழிக்காட்டுதலின் படி செபி அமைப்பு தனது விசாரணையில் அதானி குழுமம் செய்த 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுக்கு வந்துள்ளதாகவும், 2 பரிமாற்றங்களின் விசாரணை இடையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் செபியின் முந்தைய 15 நாள் அவகாசம் கேட்டு சமர்ப்பிக்கப்பட்ட மனு மற்றும் 24 பரிமாற்றங்களில் 22 பரிமாற்றங்களின் விசாரணை முடிவுகளின் அறிக்கை ஆகிய இரண்டையும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி அதாவது இன்று விசாரிக்க உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 60.74 புள்ளிகள் உயர்ந்து, 65,057.34 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் நிஃப்டி குறியீடு 30.90 புள்ளிகள் உயர்ந்து 19,336.95 புள்ளிகளை காலை 12 மணியளவில் எட்டியது.
இந்த வர்த்தக சூழ்நிலையில் செபியின் விசாரணை அறிக்கையை இன்று சுப்ரீம் கோர்ட் விசாரணை செய்ய உள்ள நிலையில் அதானி குழும பங்குகளின் நிலவரம் என்ன?
அதானி எண்டர்பிரைசஸ் - 1.44 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் - 10.25 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 2.47 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 0.02 சதவீதம் சரிவு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
அதானி கிரீன் எனர்ஜி - 1.18 சதவீதம் சரிவு
அதானி டோட்டல் கேஸ் - 0.33 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 0.09 சதவீதம் சரிவு
ஏசிசி லிமிடெட் - 0.10 சதவீதம் சரிவு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 1.13 சதவீதம் உயர்வு
NDTV - 0.64 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications