அதானி குழும நிறுவன பங்குகளில் சிறு முதலீட்டாளர்களின் நலனைப் பாதுகாப்பதில் பங்குச்சந்தை சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி தனது பங்கை சரியான முறையில் செய்கிறதா என்பதை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் முக்கிய அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தற்போது சுப்ரீம் கோர்ட்-ல் தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று செபி சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட் அமைத்த குழு கண்டறிந்துள்ளது.

மேலும் செபி அக்டோபர் 2020 முதல் அதானி குழுமத்தின் பங்கு இருப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாகவும், அதில் உறுதியான ஆதாரங்களை செபி கண்டறியவில்லை எனவும் இந்த சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஷாட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் குற்றச்சாட்டுகள் மூலம் செபி-யின் சந்தேகங்களை வலுப்படுத்திய நிலையில், வெளிநாட்டில் இருந்து முதலீடு செய்யப்பட்ட பணம் அதானி குழுமத்தால் நிதியளிக்கப்படவில்லை என்பதை செபியால் நிரூபிக்க முடியவில்லை என்றும் இக்குழு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தை ஆய்வு செய்யும் சுப்ரீம் கோர்ட் நியமித்த சிறப்பு குழுவில் திரு ஓ.பி.பட், ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.பி.தேவதத், திரு.நந்தன் நிலகேணி, திரு.கே.வி.காமத், திரு.சோமசேகரன் சுந்தரேசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம்.சப்ரேயின் தலைமையில் செயல்படும்.
இந்த குழுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய பென்ச் நியமித்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமத்தில் முதலீடு செய்யப்பட்ட 13 வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்று செபி சந்தேகிக்கும் நிறவனங்களில் சுமார் 42 தரப்பு முதலீடு செய்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்தக்கட்ட ஆய்வுகளையும் தரவுகளையும் திரட்டி வருகிறது செபி.
பொதுசந்தையில் இருக்கும் பங்கு இருப்புகள் உண்மையாக பொது சந்தை முதலீட்டாளர்களிடம் இல்லை, இது ப்ரோமோட்டர்கள் கம்பெனி கட்டுப்பாட்டில் இருப்பது என்ற சந்தேகம் நீண்ட காலமாக செபிக்கு உள்ளது என்று இந்த சிறப்பு குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதை உறுதி செய்யும் வகையில் செபி அக்டோபர் 2020 முதல் ஆய்வை துவங்கியுள்ளது, சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு முன்பே ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுகளை மையமாக வைத்து விசாரணைய செபி துவங்கியது.
இந்த குற்றச்சாட்டுகள், சந்தேகங்கள் ஆதாரம் இல்லாமல் நிரூபணம் ஆகாது, இதை செபியின் விசாரணை தான் உறுதி செய்யும். மத்திய நேரடி வரி வாரியம், அமலாக்க துறை போன்ற அரசின் பல துறைகளின் உதவி இல்லாமல் 13 நிறுவனங்களின் உண்மையான உரிமையாளர் யார் என்பதை செபி கண்டுப்பிடிக்க முடியாது என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications