அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தை பெரிய அளவிலான பாதிப்பை அடைந்தது மட்டும் அல்லாமல் அதானி பங்குகள் மீது ஷாட்டிங் செய்து பலர் அதிகப்படியான லாபத்தை பெற்றனர்.
இதுகுறித்த விசாரணையை அமலாக்க துறை செய்தது, அதானி பங்குகள் மீது ஷாட்டிங் செய்து 12க்கும் அதிகமான வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் அதிகப்படியான லாபத்தை அடைந்துள்ளனர் எனவும், இவர்கள் அனைவரும் வரி சலுகை நிறைந்த நாடுகளில் இருப்பவர்கள் என்றும் கண்டுப்பிடித்து அமலாக்க துறை, செபியிடம் அறிக்கை சமர்பித்துள்ளது.

ஷாட் செல்லிங் என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று பந்தையம் கட்டி அதன் மூலம் லாபம் பெறுவது, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளிவந்த உடனேயே பல பெரும் முதலீட்டாளர்கள் அதானி பங்குகளை ஷாட்டிங் செய்தனர். சில குறைந்த எண்ணிக்கையிலான முதலீட்டாளர்கள் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே அதானி பங்குகளை ஷாட்டிங் செய்தாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் அமலாக்க துறை செய்த ஆய்வில் சில ஷாட் செல்லர்கள் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை வெளியான ஜனவரி 24 ஆம் தேதிக்கு 2-3 நாட்கள் முன்பாகவே இக்குழும பங்குகள் மீது ஷாட் செய்துள்ளனர் என ஜூலை மாதம் செபி அமைப்பிற்கு சமர்பித்த அறிக்கையில் அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
செபியிடம் பதிவு செய்யப்பட்ட உள்நாட்டு முதலீட்டாளர்கள், வெளிநாட்டு போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் தங்களுடைய முதலீட்டை பாதுகாக்க சந்தையின் ரிஸ்க் பாதிப்புகளை குறைக்க ஷாட் பொசிஷன் எடுக்க அனுமதிக்கிறது. அப்படி அமலாக்க துறை ஆய்வில் லாபம் அடைந்ததாக கூறப்படும் 12 நிறுவனங்களில்...
3 இந்தியாவை சேர்ந்தது, 4 மொரிஷியஸ் நாட்டை சேர்ந்தது. பிரான்ஸ், ஹாங்காங், கேமன் தீவுகள், அயர்லாந்து மற்றும் லண்டன் ஆகியவற்றில் இருந்து தலா ஒரு நிறுவனம் அதானி குழும பங்குகள் மீது ஷாட்டிங் செய்து பெரிய அளவிலான லாபத்தை பார்த்துள்ளது என அமலாக்க துறை, செபி-யிடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications