அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் நிலுவையில் உள்ள 2 குற்றச்சாட்டுகளின் விசாரணைகளை அடுத்த மூன்று மாதங்களில் முடிக்குமாறு செபி அமைப்பிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இன்று அதானி - ஹூண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் தொடர்பாகக் குவிந்த பல்வேறு மனுக்களின் விசாரித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது.

3 நீதிபதிகள் அடங்கிய பென்ச் செபி விசாரணையில் சந்தேகம் ஏற்படும் வகையில் ஓசிசிபிஆர் அறிக்கையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் 3ஆம் தரப்பு விசாரணை அறிக்கைகளை உண்மையெனக் கருத முடியாது எனவும் உச்ச நீதிமன்ற பென்ச் தெரிவித்துள்ளது.
மேலும் ஹூண்டன்பெர்க் ரிசர்ச் அறிக்கைக்குப் பின்பு வந்த OCCPR அறிக்கையின் மீதான நம்பிக்கை நிராகரிக்கப்பட்டது மற்றும் எந்தச் சரிபார்ப்பும் இல்லாமல் மூன்றாம் தரப்பு அமைப்பு அறிக்கையை ஆதாரமாக நம்ப முடியாது என்று உச்சநீதிமன்ற பென்ச் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வழக்கின் விசாரணையைச் செபியிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்ற எந்த அடிப்படையும் இல்லை என்று தலைமை நீதிபதி கூறி தீர்ப்பளித்தார். இதன் மூலம் அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து செபி விசாரணை செய்யும்.
உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவின் பரிந்துரைகளின்படி செயல்படுவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசு மற்றும் செபியை உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் வழக்கின் உண்மைகள் கண்டறிவதில் விசாரணையை எஸ்ஐடி அல்லது பிற ஏஜென்சிக்கு மாற்றுவதில் எவ்விதமான உத்தரவாதமும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
FPI மற்றும் LODR விதிமுறைகள் மீதான அதன் திருத்தங்களைத் திரும்பப் பெற செபிக்கு உத்தரவிடச் சரியான காரணம் எதுவும் இல்லை என்றும் தலைமை நீதிபதி உட்பட 3 நீதிபதிகள் அடங்கிய பென்ச் கூறியுள்ளது. மேலும் FPI-ஐ விவரிக்கச் செபி அமைப்பு ஒளிபுகா என்ற சொல்லைப் பயன்படுத்தியது, இதை உச்ச நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழுவால் தவறாக புரிந்துகொள்ளப்பட்டது எனவும் தலைமை நீதிபதி கூறினார்.
SEBI இதுகுறித்து கூறுகையில் FPI விதிமுறைகள் அதன் கட்டமைப்பு செபி விசாரணைக்கு எவ்விதமான தடையாக இல்லை, உண்மையில் இந்த விதிமுறைகள் மூலம் முதலீட்டின் வாயிலாக நன்மை அடையும் இறுதி நபரைக் கண்டறிய முடியும் எனவும் தலைமை நீதிபதி கூறினார்.
உச்ச நீதிமன்றம் நியமித்த குழுவில் முரண்பாடு இருப்பதாக வந்த மனுவையும், குற்றச்சாட்டையும் மொத்த மறுத்துள்ளது. மேலும் ஹூண்டன்பெர்க் ரிசர்ச் அறிக்கை மற்றும் அதன் ஷார்ட் செல்லிங் மீது ஏதேனும் விதிமுறை மீறல்கள் உள்ளதா என்பதை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கும், செபிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

உச்சநீதிமன்றம் இன்று பல்வேறு மனுக்கள் மீதான தீர்ப்பில் அதானி குழுமத்திற்கு பாதகமாக எவ்விதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் அதானி குழும முதலீட்டாளர்களுக்கும், அதான குழும பங்குகளும் சாதகமான சூழ்நிலை உருவாக்கியுள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 3.00 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் & SEZ - 1.27 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 3.88 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 9.35 சதவீதம் உயர்வு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
அதானி கிரீன் எனர்ஜி - 4.29 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 6.94 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 4.53 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 0.52 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 0.91 சதவீதம் உயர்வு
NDTV - 4.86 சதவீதம் உயர்வு
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப் பெரிய மோசடி" என்ற வகையில் அதானி குழுமம் செய்த பல்வேறு தவறுகளைத் தொகுத்து அறிக்கை வெளியிட்டது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிவிப்பைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 15 பில்லியன் டாலர் வரையில் சந்தித்தது. இந்தச் சரிவின் மூலம் சாமானிய ரீடைல் முதலீட்டாளர்கள் இழப்பை எதிர்கொண்ட நிலையில் உச்ச நீதிமன்ற செபி-க்கு அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது.
சுமார் 24 குற்றச்சாட்டுகளில் 22ன் விசாரணையை முடித்துச் செபி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் வேளையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உண்மை எனக் கருதுவதை விட, செபி அமைப்பின் விசாரணையின் முடிவுகள் தான் இறுதி மற்றும் முக்கியம் என்ற வகையில் தெரிவிக்கப்பட்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications