அதானி குழுமம் பங்கு விலையை செயற்கையாக உயர்த்தியுள்ளது என்றும், பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என ஹிண்டன்பர்க் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க பங்கு சந்தைக் கட்டுப்பாட்டு அமைப்பான செபிக்கு 2 மாதம் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் கேட்டது.
இந்த நிலையில் செபி-க்கு கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. ஆனால் செபி குறைந்தது ஆறு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை பரிசீலிப்பதாக ஒத்திவைத்துள்ளது.

செபியின் விசாரணை மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் வேளையில் விசாரணை செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டு இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (SEBI) உச்ச நீதிமன்றம் மார்ச் 2 ஆம் தேதி உத்தரவிட்டது.
இந்த விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது. மார்ச் 2 தேதி சுப்ரீம் கோர்ட் உத்தரவில் செபி நடந்துவரும் விசாரணையின் ஒரு பகுதியாக, செபி 3 முக்கியமான விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்று பெஞ்ச் உத்தரவிட்டது, இதோடு SEBI தனது விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் விரைவாக முடித்து, நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டது.

தற்போது இந்த 2 மாத காலம் முடிவடைந்த நிலையில் செபி விசாரணைக்கான கால அவகாசத்தை 6 மாதம் நீட்டிக்க மனு கொடுக்கப்பட்டு, இன்று விசாரணைக்கு வந்த நிலையில் செபிக்கு கூடுதலாக மூன்று மாத கால அவகாசம் வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
ஆனால் செபி குறைந்தது ஆறு மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், கால நீட்டிப்பு கோரிய மனுவை மே 15 திங்கட்கிழமை பரிசீலிப்பதாக ஒத்திவைத்துள்ளது. திங்கட்கிழமை சுப்ரீம் கோர்ட் முடிவுகளை தொடர்ந்து செபி தனது விசாரணையை வேகப்படுத்தும்.


Click it and Unblock the Notifications