அதானி பங்களாதேஷ் விவகாரம்.. பிரதமர் மோடி அரசு விலகியதா.. உண்மை நிலவரம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அதானி குழும பங்குகள் ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு தொடர்ந்து கடும் வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன. இது அதானி குழுமத்திற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இது அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை குறைக்கும் ஒரு விஷயமாக வந்துள்ளது எனலாம். ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது தற்போது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது எனலாம்.

இதற்கிடையில் அதானி குழுமத்தின் விவகாரம் அரசியல் ரீதியாகவும் புயலை கிளப்பி வருகின்றது எனலாம்.

ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!ரூ.10000000000000 இழப்பு.. வெறும் 7நாளில் அதானி சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி.. சந்தை மதிப்பு 51% சரிவு..!

 அதானி - மோடி சர்ச்சை

அதானி - மோடி சர்ச்சை

ஏனெனில் பல வருடங்களாகவே மோடியின் நண்பர் அதானி. அதானி குழுமங்களுக்கு சாதகமாக பிரதமர் மோடி சாதகமாக இருக்கிறார் என்ற பரவலான கருத்துகள் இருந்து வந்தது. ஆனால் இதனை கெளதம் அதானியோ சமீபத்திய காலமாகவே மறுத்து வருகின்றார். சமீபத்திய ஆங்கில செய்திக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய வளர்ச்சிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நபரும் காரணம் இல்லை என விளக்கம் கொடுத்திருந்தார்.

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

இந்த விளக்கத்தின் மத்தியிலும் பிரதமர் மோடி, அதானி இருவரிடையே ஓரு ஆழமான உறவு இருப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையில் தான் அதானி குழுமத்தின் மீதான ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் மீதான குற்றசாட்டும் வந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு வெளிப்படையான எந்த கருத்தியினையும் இதுவரையில் கூறவில்லை. எனினும் ரிசர்வ் வங்கி, செபியோ தங்களது பணிகளை செய்து வருகின்றன. இதில் இருந்தே அதானி குழுமத்திடம் இருந்து மத்திய அரசு விலகி இருப்பதாக அரசல் புரசலான கருத்துகள் வலம் வந்து கொண்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் விவாதம்

நாடாளுமன்றத்தில் விவாதம்

அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் நாடாளுமன்ற குழு அல்லது உச்ச நீதிமன்ற தலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இதற்கிடையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் தொடர்ந்து சந்தை மதிப்பை இழந்துள்ள அதானி குழும நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ள எல்ஐசி, பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்களின் முதலீடு தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என, எதிர்கட்சிகள் தரப்பில் விதி எண் 267ன் கீழ் வணிக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

விவாதிக்க விருப்பம்

விவாதிக்க விருப்பம்

இந்த விவாகாரம் குறித்து விவாதம் நடத்த நாங்கள் விரும்பினோம். ஆனால், எங்களுடைய நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டது. நாங்கள் முக்கியமான விஷயங்கள் குறித்து நாங்கள் விவாதிக்க விரும்பும் போதெல்லாம், எங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பல வங்கிகளும் முதலீடு செய்துள்ளது. இதில் ஏழைகளின் பணமும் உள்ளது. அந்த பணம் குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படுகிறது. அந்த முதலீடுகள் இழப்பைச் சந்திக்கும்போது அது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியமான ஒன்று. ஆக இந்த விவாகாரம் குறித்து நாடாளுமன்றக் குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மேற்பார்வைாயிலான குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

குறைந்த விலையில் நிலக்கரி

குறைந்த விலையில் நிலக்கரி

குறைந்த விலையில் நிலக்கரி இதற்கிடையில் அதானி குழுமம் பங்களாதேஷ் இடையேயான விவகாரமும் தற்போது பெரிதாக தொடங்கியுள்ளது. பங்களாதேஷ் அதானி குழுமத்துடன் உடனான மின் கொள்முதல் ஒப்பந்தத்தின் கீழ் குறைந்த விலையில் நிலக்கரி அனுப்ப கோரி கடிதம் எழுதியுள்ளது.

இது மேலும் சிக்கல்

இது மேலும் சிக்கல்

அதானி குழுமம் ஹிண்டர்ன்பர்க் விவகாரத்தின் மத்தியில், பங்களாதேஷ் உடனான ஒப்பந்தத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இந்த விவகாரத்தில் இருந்து மத்திய அரசு தலையிடவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆக ஏற்கனவே பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் அதானிக்கு இது மேற்கொண்டு சிக்கலாக பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் உடன் ஒப்பந்தம்

பங்களாதேஷ் உடன் ஒப்பந்தம்

பங்களாதேஷ் அரசு கடும் மின்சார பற்றாக்குறைக்கு மத்தியில், இந்தியாவில் இருந்து மின்சாரத்தினை வாங்கி வருகின்றது. குறிப்பாக அதானி குழுமத்திடம் இதற்காக கடந்த 2017ம் ஆண்டே பங்களாதேஷ் ஒரு ஒப்பந்தத்தினையும் போட்டுள்ளது. தற்போது இந்த ஒப்பந்தம் புதுபிக்கப்பட வேண்டிய நிலையில், பங்களாதேஷ் அரசு விலையை மாற்றியமைக்க கோருவதாகவும் கூறப்படுகின்றது. நிலக்கரி அடிப்படையில் தயாரிக்கப்படும் இந்த மின்சாரம் விலை உயர்ந்ததாக இருக்கும்பட்சத்தில், இது சாத்தியமானதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இது சாத்தியமா?

இது சாத்தியமா?


மேலும் பணவீக்கமானது உயர்ந்து வரும் சுழலில் விலையை குறைப்பது எப்படி சாதகமாக அமையும் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இது மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு எதிராக உள்ளது. இது அதானி குழுமம் பிரச்சனையில் உள்ள இந்த நேரத்தில் வந்திருப்பது இன்னொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் அரசு விலகியே இருப்பதாக கூறப்படும் நிலையில், இதனை எப்படி அதானி குழுமம் சமாளிக்க போகிறதோ? தெரியவில்லை. இது அதானிக்கு போறாத காலம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Adani Issue updates:Modi govt keep distance from adani's troubled Bangladesh deal

Adani Issue updates:Modi govt keep distance from adani's troubled Bangladesh deal
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X