அதானி குழுமம் ஹிண்டன்பர்க் பிரச்சனையில் இருந்து முழுமையாக வெளியேறாத நிலையிலும் தொடர்ந்து வர்த்தக்தை விரிவாக்கம் செய்து வருகிறது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமான அதான் பவர் நிறுவனம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதன் மூலம் அண்டை நாடான பங்களாதேஷ்-க்கு ஜாக்பாட் அடித்துள்ளது.
அதானி பவர் லிமிடெட் ஜார்கண்ட் மாவட்டத்தில் உள்ள கோடா (Godda) பகுதியில் தனது முதல் 800 மெகாவாட் அல்ட்ரா - சூப்பர் - கிரிட்டிகல் அனல் மின் உற்பத்தியை துவங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதானி பவர் இந்த அனல் மின் உற்பத்தி ஆலையில் இருந்து சுமார் 748 மெகாவாட் மின்சாரத்தை பங்களாதேஷ் நாட்டிற்கு வழங்கத் தொடங்கியுள்ளது.

கோடாவில் இருந்து வழங்கப்படும் மின்சாரம், திரவ எரிபொருளில் இருந்து உற்பத்தி செய்யப்படும் விலையுயர்ந்த மின்சாரம் இல்லை என்பதால் பங்களாதேஷ் குறைவான விலையிலேயே மின்சாரத்தை வாங்க முடியும். இது அந்நாட்டின் வர்த்தகம், உற்பத்தி, பொருளாதாரத்திற்கு ஜாக்பாட் ஆக மாறியுள்ளது.
கோடா பவர் பிளாண்ட் இந்தியா - பங்களாதேஷ் நாடுகள் மத்தியிலாண நீண்ட கால உறவின் முக்கிய சொத்தாக உள்ளது என்று அதானி பவர் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி திரு எஸ் பி கியாலியா கூறியுள்ளார். இந்த அனல் மின் உற்பத்தி நிலையத்தில் 100% ஃப்ளூ கேஸ் டீசல்ஃபரைசேஷன் (FGD), SCR மற்றும் ஜீரோ வாட்டர் டிஸ்சார்ஜ் ஆகியவற்றுடன் இயங்குவதால் முதல் நாளிலிருந்து அதன் முழு செயல்பாட்டைத் தொடங்கியுள்ளது.
ஒட்டுமொத்த தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் திறமையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த அனல் மின் நிலையமாகவும் கோடா அனல்மின் நிலையம் விளங்குகிறது. ஜார்கண்ட் மாவட்டத்தில் அதானி பவர் நிறுவனம் சுமார் 10000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இலக்கின் முக்கிய அங்கமாக இந்த கோடா அனல்மின் நிலையம் உள்ளது. இந்த திட்டங்கள் மூலம் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிகப்படியான வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி வாய்ப்பு உருவாகும்.

2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டு, அதானி பவர் நிறுவனத்தின் கிளை நிறுவனமான Adani Power Jharkhand Limited உடன் 1,496 மெகாவாட் மின்சாரத்தை கோடா அனல் மின் நிலையத்தில் இருந்து பெறுவதற்காக Power Purchase Agreement (PPA) செய்தது. இதன் அடிப்படையில் தற்போது 748 மெகாவாட் மின்சாரத்தை விநியோகம் செய்கிறது.
கோடா அனல் மின் நிலையம் அல்ட்ரா - சூப்பர் - கிரிட்டிகல் அனல் மின் உற்பத்தி தளமாக விளங்க முக்கிய காரணம், இத்தளத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யும் எமிஷன்களை கட்டுப்படுத்தி முறையாக நிலக்கரி மற்றும் தண்ணீர்-ஐ பயன்படுத்துவதை தாண்டி Flue Gas Desulphurization (FGD) மற்றும் Selective Catalytic Reduction (SCR) ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் மிகவும் பசுமையான அனல் மின் நிலையமாக இருப்பது மட்டும் அல்லாமல் சுற்றுச்சூழல் பெரிய அளவில் பாதுகாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications