இந்தியாவின் 2வது பெரிய பணக்காரரான கௌதம் அதானியின் சொத்து மதிப்பு கடந்த சில மாதங்களாகவே பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வந்தது.
அதானி குழுமத்தின் வர்த்தக வளர்ச்சி மூலம் முதலீட்டாளர்கள் இந்நிறுவனப் பங்குகளின் விலை தாறுமாறாக உயர்ந்து ஆசிய பணக்காரர்கள் பட்டியலிலும் 2வது இடத்தைப் பிடித்தார்.
கௌதம் அதானி கோவிந்தா
இதற்கிடையில் NSDL அமைப்பு எடுத்த நடவடிக்கையின் வாயிலாக அதானியின் சொத்து மதிப்பு கடந்த 20 நாட்களில் சுமார் 18.8 பில்லியன் டாலர் வரையில் குறைந்துள்ளது. மேலும் ஜூன் 14 முதல் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் தொடர்ந்து சரிவு பாதையில் உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தக
இதன் மூலம் வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு என்பது 56.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. ஜூன் 14ஆம் தேதி 74.9 பில்லியன் டாலர் அளவில் இருந்து NSDL அமைப்பின் அறிவிப்புக்குப் பின்பு தொடர் சரிவு தான்.
3.7 பில்லியன் டாலர் இழப்பு
இந்த 20 நாட்களில் அதானி பங்குகள் சில நாட்கள் உயர்வைச் சந்தித்தாலும் பெரும்பாலான நாட்கள் சரிவை மட்டும் பதிவு செய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மட்டும் கௌதம் அதானியின் 4 நிறுவனங்கள் லோவர் சர்கியூட் அளவை அடைந்த காரணத்தால் ஜூலை 2ஆம் தேதி மட்டும் 3.7 பில்லியன் டாலரை இழந்தார் கௌதம் அதானி.
20 பில்லியனர்கள் பட்டியல்
இதுமட்டும் அல்லாமல் இந்த மோசமான 20 நாள் சரிவில் கௌதம் அதானி சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலரில் இருந்து 56.1 பில்லியன் டாலராகக் குறைந்த நிலையில் உலகின் டாப் 20 பில்லியனர்கள் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டார் கௌதம் அதானி.
சரி NDSL அமைப்பு அப்படி என்ன செய்தது..? ஒரு சின்ன ரீகேப்.
ஒரு சின்ன ட்வீட்
ஜூன் 12ஆம் தேதி சுதேதா தலால் என்பவர் நிறுவனத்தின் பெயர் குறிப்பிடாமல் இன்னொரு மோசடி செபி டிராக்கிங் சிஸ்டத்தில் சிக்கியும் நிரூபணம் செய்யப்பட முடியாமல் உள்ளது எனத் தனது ட்விட்டரில் பதிவு செய்தார்.
NSDL அமைப்பு
இந்த ட்வீட் யாருடையது என்பது முழுமையாகத் தெரிவதற்குள் கௌதம் அதானி குழுமத்தின் 4 நிறுவன பங்குகளில் முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை, இந்திய பத்திர வைப்பு அமைப்பான NSDL முடக்கியுள்ள தகவல் வெளியானது. இதனால் சுதேதா தலால் கூறுவது அதானி குழுமத்தைத் தான் என்று அறியப்பட்டது. எது எப்படி ஆயினும் NSDL அமைப்பு எடுத்த நடவடிக்கை உண்மை.
வெளிநாட்டுக்
அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 வெளிநாட்டுக் கணக்குகளை மூலம் சுமார் 43,500 கோடி ரூபாய் மதிப்பிலான அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகளைத் தனது FPI கணக்கில் முதலீடு செய்து இருப்பதாக வைத்துள்ளது.
FPI கணக்கை
NSDL அமைப்பு முடக்கிய இந்த 3 நிறுவனங்களின் FPI கணக்கை மே 31ஆம் தேதியன்று முடக்கியுள்ளதாகவும், இந்தச் செய்தி ஜூன் 14ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்தச் செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.
கௌதம் அதானி சொத்து மதிப்பு
இதனால் அதானி நிறுவனப் பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து வருகிறது. கடந்த 20 நாள் சரிவில் கௌதம் அதானி சொத்து மதிப்பு 75 பில்லியன் டாலரில் இருந்து 56.1 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.
மொரீஷியஸ் கணக்கு
ஜூன் 14ஆம் தேதி வெளியான தரவுகள் அடிப்படையில் இந்த அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 நிறுவனங்களும் வரிச் சலுகை அதிகமாக இருக்கும் மொரீஷியஸ் நாட்டின் போர்ட் லூயிஸ் பகுதியில் ஒரே முகவரியில் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
போலி நிறுவனங்கள்
ஓரே முகவரியில் 3 நிறுவனங்கள் இந்தியாவில் மட்டும் அல்ல எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது. இந்தத் தகவல் உண்மையாகும் பட்சத்தில் 3 நிறுவனங்களும் போலி நிறுவனங்களாகக் கருதப்படும். இதன் மூலம் இந்தக் கணக்குகள் மூலம் முதலீடு செய்துள்ள பணம் யாருடையது என்ற கேள்வியும் எழுகிறது.
பணச் சலவை திட்டம்
இதேபோல் மற்றொரு தகவலும் வெளியானது, NSDL அமைப்பு அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய 3 நிறுவனங்களின் மீது Prevention of Money Laundering Act (PMLA) கீழ் நடவடிக்கை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
RTA விளக்கம்
ஜூன் 14ம் தேதி NSDL அமைப்பின் நடவடிக்கை மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்த நிலையில் குறிப்பிட்ட அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட் மற்றும் ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் ஆகிய 3 நிறுவனங்களின் கணக்குகள் முடக்கப்படவில்லை (Forzen) ஹோல்ட் மட்டுமே செய்யப்பட்டு உள்ளது என Registrar and Transfer Agent எழுத்துப்பூர்வமாக மின்னஞ்சல் மூலம் உறுதி செய்துள்ளது என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.
அதானி குழுமத்தின் வேண்டுகோள்
இதன் பின்பு அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி தனது நிறுவனத்தில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் ஒரு இணையத் தளம் கொண்டு வந்தால் உதவியாக இருக்கும் எனக் கூறியுள்ளது. 43,500 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள ஒரு நிறுவனதிற்கு ஒரு வெப்சைட் கூடவா வைத்திருக்க முடியாது..?!
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications