2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கான பட்ஜெட் என்று சொன்னாலும், பெரும்பாலான அறிவிப்புகள் கேபெக்ஸ் சந்தைக்குச் சாதகமாகவே உள்ளது. குறிப்பாக மாத சம்பளக்காரர்களுக்குச் சாதகமாக எவ்விதமான அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது தான் உண்மை.
இந்நிலையில் பட்ஜெட்டில் வெளியான ஒரு அறிவிப்பு இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி, கௌதம் அதானி, சுனில் மிட்டல் ஆகியோருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட் அறிக்கையில், டேட்டோ சென்டர், எனர்ஜி ஸ்டோரேஜ் சிஸ்டம் பிரிவில் சார்ஜிங் இன்பராஸ்டக்சர், கிரிட் ஸ்கேல் பேட்டரி சிஸ்டம் ஆகியவற்றை ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு பட்டியல் சேர்க்கப்பட உள்ளதாக அறிவித்தார். ஏப்ரல் 1 முதல் இப்புதிய அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது.
குறைந்த வட்டியில் கடன்
இந்தியாவின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்தி வரும் மத்திய அரசு டேட்டா சென்டர் முதல் சார்ஜிங் ஸ்டேஷன் வரையில் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்புப் பட்டியலில் சேர்த்துள்ள காரணத்தால், இப்பிரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் இன்பரா மற்றும் கிளீன் எனர்ஜி ஸ்டோரேஜ் பிரிவில் குறைந்த வட்டியில் நீண்ட காலக் கடன் பெறும் வாய்ப்பை உருவாக்கியுள்ளது.
டேட்டா சென்டர் தேவை அதிகரிப்பு
இந்திய அரசு ஏற்கனவே இந்தியாவில் இயங்கி வரும் அனைத்து நிறுவனங்களும் இந்திய வாடிக்கையாளர்களின் தரவுகளை இந்தியாவிலேயே வைக்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது. இதேவேளையில் இந்தியாவில் பேமெண்ட்ஸ், ஈகாமர்ஸ், குவான்டம் கம்பியூட்டிங் பிரிவிலும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் டேட்டா சென்டருக்கான தேவை அதிகரித்துள்ளது.
கௌதம் அதானி மற்றும் சுனில் மிட்டல்
டிஜிட்டல் சேவைகளும், டிஜிட்டல் வாடிக்கையாளர்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் தற்போது டேட்டா சென்டர்-க்கான சேவை பெரிய அளவில் அதிகரித்துள்ளது. டேட்டா சென்டர் வர்த்தகத்தில் கௌதம் அதானி மற்றும் சுனில் மிட்டல் ஆகியோரின் நிறுவனங்கள் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் இந்த அறிவிப்பு ஜாக்பாட் ஆகப் பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி
இதேபோல் முகேஷ் அம்பானி 76 பில்லியன் டாலர் முதலீட்டுத் திட்டத்தில் மாபெரும் எனர்ஜி ஸ்டோரேஜ் தொழிற்சாலையை அமைத்து வரும் நிலையில், பட்ஜெட் அறிவிப்பு மூலம் குறைவான வட்டியில் நீண்ட காலக் கடனை எளிதாகப் பெற முடியும்.
அதானி டேட்டா சென்டர்
அதானி டேட்டா சென்டர் வர்த்தகத்தில் உலகளவில் மிகப்பெரிய நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளார். ஏற்கனவே மும்பை, சென்னை, ஹைதராபாத், டெல்லி ஆகிய நகரங்களில் டேட்டா சென்டரை ஆதானி குழுமம் உருவாக்கியுள்ளது.
ஏர்டெல் - டேட்டா சென்டர் - கிளவுட்
இந்தியாவில் 2வது பெரிய நிறுவனமாக இருக்கும் பார்தி ஏர்டெல் செப்டம்பர் மாதத்தில் தனது டேட்டா சென்டர் அளவை 3 மடங்காக அதிகரிக்க வேண்டும் என்பதற்காக 50,000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இதோடு கூகுள் முதலீட்டில் மூலம் கிளவுட் சேவையை விரிவாக்கம் செய்ய உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications