உள்கட்டமைப்பு துறையில் கோலேச்சி வரும் அதானி, தற்போது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் மூலதன பொருட்கள் உற்பத்தியில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதன் மூலம் உலகின் மலிவான பசுமை எலக்ட்ரானை உற்பத்தி செய்யும் என தெரிவித்துள்ளார்.
கப்பல் முதல் எனர்ஜி வரையிலான துறையில் வளர்ச்சி கண்டு வரும் அதானி, புதுபிக்கதக்க மின் உற்பத்தியினை அடுத்த நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.
அதானியின் மாஸ் திட்டம்
மேலும் 2025ம் ஆண்டிற்குள் அதன் துறைமுகங்களை நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை குறைக்க திட்டமிள்ளதாக தெரிவித்துள்ளது. 2025 வரையில் மூலதன செலவினங்களில் 75% பசுமை தொழில்நுட்பங்களுக்காக செலவிடவுள்ளதாகவும் அதானி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஜேபி மார்கன் இந்திய முதலீட்டாளர் உச்சி மாநாட்டில் பேசிய அதானி குழும தலைவர், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் மூலதன பொருட்கள் உற்பத்தியில் அடுத்த 10 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்
இது நாட்டின் மற்றொரு பில்லியனர் ஆன ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி கிளீன் பவர் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்திற்காக அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 75,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்த, சில வாரங்களுக்கு பின்னர் அதானியின் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
1 டாலருக்கு ஹைட்ரஜன்
தொடர்ந்து பல ஆண்டுகளாக புதுபிக்கதக்க ஆற்றல் இடத்தில் முன்னிலையில் இருக்கும் அதானியுடன், நேரடியாக போட்டியிடும் விதமாக அம்பானியின் அறிவிப்பு வந்தது. மேலும் உலக நாடுகளே ஆச்சரியப்படும் விதமாக, இம்மாத தொடக்கத்தில் ஒரு கிலோ ஹைட்ரஜனை, 1 டாலருக்கு உற்பத்தி செய்ய அம்பானி திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை பயன்படுத்தலாம்
ஹைட்ரஜனில் கார்பன் உமிழ்வு என்பது இல்லை. ஆக கார்பன் உமிழ்வை குறைக்க தொழில் மற்றும் வாகனங்களில் பசுமை ஹைட்ரஜனை எரிபொருளாக பயன்படுத்தலாம் என அம்பானி அப்போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கால நிலை மாற்றத்தினை சரிசெய்யும் விதமாக உலக நாடுகள் கார்பன் உமிழ்வை குறைக்க திட்டமிட்டு வரும், இந்த நிலையில் இந்தியாவிலும் இதுபோன்ற விஷயங்கள் எதிர்காலத்தில் வரவேற்பை பெறலாம் என்ற நிலையில், இந்த இருபெரும் ஜாம்பவான்களின் திட்டம் நிச்சயம் வரவேற்பை பெறலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. .
அதானியின் திறன்
அதானி இந்த 20 பில்லியன் டாலர் முதலீடு குறித்து, உலகில் எந்த நிறுவனமும், அதானியை போல புதுபிக்கதக்க ஆற்றல் துறையில் இந்தளவுக்கு இல்லை. அதானி குழுமம் தற்போது 4,950 மெகவாட் புதுபிக்கதக்க ஆற்றல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. மேலும் 5,124 மெகாவாட் செயல்பாட்டில் உள்ளது.
மேலும் 9,750 மற்றும் 4,500 மெகாவாட் திறனுள்ள பைப்லைன் ஒப்பந்தங்களை பெற வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மிகப்பெரிய சோலார் உற்பத்தியாளர்
ஏற்கனவே நாங்கள் மிகப்பெரிய சோலார் பவர் உற்பத்தியாளராக உள்ளோம். எங்களின் உற்பத்தி மற்றும் கட்டுமானம், ஒப்பந்தங்களை கணக்கிடுகிறோம். இதனை வெறும் 2 ஆண்டுகளில் செய்துள்ளோம். எங்களின் ஆரம்பகால இலக்கு 25 ஜிகாவாட்டினை 4 வருடங்களில் எட்டியுள்ளது. இது நாங்கள் நிர்ணயித்த காலத்திற்கு முன்னதாக செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications