அதானி வில்மார் நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்யும் முயற்சியில் கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் திட்டமிட்டு இதற்கான பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை துவங்கியுள்ள செய்தியின் தாக்கம் குறைவதற்கு முன்பு, 2 அதானி குழும நிறுவனங்கள் 3000 கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்ட திட்டமிட்டு வருகிறது.
இதற்கு மத்தியில் புதிய பிரச்சனையாக அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனமாக இருக்கும் அதானி போர்ட்ஸ் & SEZ இன் தணிக்கையாளர் அதாவது ஆடிட்டர் நிறுவனமான Deloitte Haskins & Sells LLP தனது பொறுப்பில் இருந்து அடுத்த சில நாட்களில் ராஜினாமா செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை, இந்த நிலையில் Deloitte Haskins & Sells LLP, அதானி போர்ட்ஸ் நிறுவனத்தில் சில பரிவர்த்தனைகளில் தணிக்கையாளர் மற்றும் நிர்வாகத்துடனான கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் வெளியேறி சுமுகமாக முடிந்து மீண்டும் தணிக்கையாளராக நியமிக்கப்பட்ட ஒரு வருடத்திலேயே மீண்டும் வெளியேற உள்ளதாக வந்த செய்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் படி அதானி போர்ட்ஸ்-ன் அடிட்டர் பதவியில் இருந்து Deloitte Haskins & Sells LLP ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது , இதற்கான அறிவிப்பு அடுத்த 3-4 நாட்களில் முறையான அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.
FY22 இன் நிறுவனத்தின் வருடாந்திர அறிக்கையின்படி, Deloitte Haskins & Sells LLP தணிக்கை நிறுவனம் கடந்த ஆண்டு அதானி போர்ட்ஸ்-ன்சட்டப்பூர்வ தணிக்கையாளராக ஐந்தாண்டு காலத்திற்கு மீண்டும் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஒரு வருடத்திலேயே வெளியேற உள்ளதாக வந்த செய்து பங்கு முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதற்கான முறையான விளக்கம் இன்னும் அதானி போர்ட்ஸ் மற்றும் Deloitte Haskins வெளியிடவில்லை.
அதானி குழும நிறுவனங்களின் ஆடிட்டர்கள் மாற்றங்களில் இது 3வது முறையாகும். இதற்கு முன்பு மே 2023ல் Shah Dhandharia & Co. LLP நிறுவனம் அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் தணிக்கையாளராக இருந்து வெளியேறியது. இந்த நிறுவன இடத்தில் Walker Chandiok & Co. LLP நியமிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications