இஸ்ரேல் - ஹமாஸ் மத்தியிலான போர் மூலம் மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய வர்த்தகங்கள் அனைத்தும் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஐடி முதல் துறைமுகம் வரையில் பல துறையில் இந்திய நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளது.
இந்த போர் காரணமாக இஸ்ரேல் நாட்டில் இருக்கும் இந்திய முதலீடுகளின் நிலைமை குறித்து பல கேள்விகள் எழுந்து வரும் வேளையில், பல நிறுவன பங்குகள் இன்று அதிகளவிலான சரிவை பதிவு செய்துள்ளது. இதில் முக்கியமான ஒன்றாக கௌதம் அதானி தலைமை வகிக்கும் அதானி குழுமத்தின் துறைமுக வர்த்தக பிரிவான அதானி போர்ட்ஸ் பங்குகள் 4.89 சதவீதம் வரையில் சரிந்தது. காரணம் அதானி போர்ட்ஸ் சொந்தமான ஹைஃபா துறைமுகம் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் அதானி போர்ட்ஸ் இன்று முக்கியமான விளக்கத்தை தனது முதலீட்டாளர்களுக்கு கொடுத்தது. இஸ்ரேலில் நிலவும் மோதலை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், வணிகத் தொடர்ந்து நடத்தும் திட்டத்துடன் (BCP) தயாராக இருப்பதாகவும் அந்நிறுவனம் திங்கட்கிழமை மாலையில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையில் தெற்கு இஸ்ரேலில் நடந்து வருவதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம், அதேநேரம் ஹைஃபா துறைமுகம் வடக்கில் அமைந்துள்ளது. இதனால் போர் பதற்றம் வடக்கு பகுதிகளில் இல்லை, ஆனாலும் எங்கள் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
எங்கள் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் முழு எச்சரிக்கையுடன் தயாராக இருக்கிறோம். எந்தவொரு நிலையிலும் திறம்பட செயல்பட business continuity plan உருவாக்கியுள்ளோம் என அதானி போர்ட்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த கார்கோ அளவில் வெறும் 3 சதவீதம் மட்டுமே ஹைஃபா துறைமுகம் கொண்டு உள்ளது. 2023-24 ஆம் நிதியாண்டில் ஹைஃபா துறைமுகத்தின் கார்கோ அளவை 10 முதல் 12 மில்லியன் டன்னாக உயர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. APSEZ நிறுவனத்தின் மொத்த கார்கோ அளவுகள் 370-390 மில்லியன் மெட்ரிக் டன்.

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்கும் திட்டத்தின் டெண்டரை 1.18 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏலத்தை வென்ற கடோட் குழுமம், அதானி போர்ட்ஸ் உடன் இணைந்தது. இந்த கூட்டணி டிசம்பர் 2022 இல் இஸ்ரேல் அரசிடம் இருந்து ஹைஃபா போர்ட் லிமிடெட் நிறுவனத்தைக் கையகப்படுத்தியது, இதற்கு இஸ்ரேல் அரசிற்கு அதானி போர்ட்ஸ் சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்தது.
இஸ்ரேல் நாட்டிற்கு ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது, இந்நாட்டின் கடல் வழியாக செல்லும் மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமார் 99 சதவீதம் ஹைஃபா துறைமுகத்தில் இருந்து தான் உலக நாடுகளுக்கு செல்கிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications