இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக வளர்ச்சி மற்றும் இயக்க நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Adani Ports and Special Economic Zone Limited - APSEZ) பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் துறைமுகங்களில் மட்டும் அல்லாமல் வெளிநாட்டுத் துறைமுகத்திலும் முதலீடு செய்து, இந்தியாவுக்கும் வெளிநாட்டுக்கும் மத்தியிலான கப்பல் போக்குவரத்தில் பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டுத் தொடர்ந்து துறைமுக துறையில் முதலீடு செய்து வருகிறது.

அதானி போர்ட்ஸ் இதற்கு முன்பு ஆஸ்திரேலியா, இஸ்ரேல் துறைமுகத்தில் முதலீடு செய்த நிலையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் முதலீடு செய்ய திட்டமிட்டு வருகிறது.
மே 2 ஆம் தேதி Malacañang அரண்மனையில் பிலிப்பைன்ஸ் அதிபர் பெர்டினண்ட் ஆர். மாக்கோஸ் ஜூனியர் உடன் அதானி போர்ட்ஸ் நிர்வாக இயக்குநர் கரண் அதானி சந்தித்த போது பிலிப்பைன்ஸ் நாட்டின் துறைமுகத்தில் முதலீடு செய்வது குறித்தும் நிறுவனத்தின் திட்டம், முதலீட்டு ஆர்வத்தையும் தெரிவித்தார்.
இதை தொடர்ந்து பிலிப்பைன்ஸ் அதிபர் அலுவலகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்தியாவின் அதானி போர்ட்ஸ் நிறுவனம், பிலிப்பைன்ஸில் துறைமுக வளர்ச்சிக்காக Bataan என்ற பகுதியில் முதலீடு செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளது. மேலும், பனாமக்ஸ் (Panamax) கப்பல்களை கையாளக்கூடிய 25 மீட்டர் ஆழமுள்ள துறைமுகத்தை உருவாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிலிப்பைன்ஸில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களை அதிபர் மார்கோஸ் வரவேற்றது மட்டும் அல்லாமல் சர்வதேச வர்த்தகத்தில் போட்டியிட பிலிப்பைன்ஸுக்கு இது உதவும் என்றும், குறிப்பாக வேளாண்மை பொருட்களைக் கையாளும் துறைமுகங்களில் கவனம் செலுத்தலாம் என்று பரிந்துரைத்தார் என்று அந்நாட்டு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவின் 2வது பெரும் பணக்காரரான கௌதம் அதானி-க்கு சொந்தமான அதானி குழுமம், ஹிண்டன்பர்க் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் சாதகமான அறிவிப்புகளை வெளியிட்ட பின்பு இக்குழும பங்குகள் தடாலடியாக உயரத் துவங்கியது.
ஹிண்டன்பர்க் விவகாரம் இன்னும் முடியாத நிலையில் அதானி குழுமம் அடுத்தடுத்து கடன் வாங்கி, முதலீடு செய்து, தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் பல நிறுவனத்தின் வர்த்தக விரிவாக்கத்திற்காக வங்கிகள், முதலீட்டாளர்களிடம் கடன் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஆதானி குழுமத்தின் 6 நிறுவனங்களுக்குப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி-யிடம் இருந்து நேரில் வந்து ஆஜராகி விளக்கம் கொடுக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இது அதானி குழுமத்திற்குப் பின்னடைவாக அமையும் என கூறப்படும் வேளையில் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பிலிப்பைன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு செய்தி வந்துள்ளது.
அதானி போர்ட்ஸ் நிறுவனம், இந்தியாவில் மிகப்பெரிய துறைமுக வளர்ச்சி மற்றும் இயக்க நிறுவனமாகும். இந்தியாவின் மேற்கு கடற்கரையில் குஜராத்தில் உள்ள முந்த்ரா, துனா, தஹேஜ் மற்றும் ஹஜிரா, கோவாவில் உள்ள மர்முகோவா, மகாராஷ்டிராவில் உள்ள திகி மற்றும் கேரளாவில் உள்ள விழிஞ்சம் ஆகிய துறைமுகங்களையும்...
கிழக்கு கடற்கரையில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹல்டியா, ஒடிசாவில் உள்ள தம்ரா மற்றும் கோபால்பூர், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கங்கவாரம் மற்றும் கிருஷ்ணபட்ணம், தமிழ்நாட்டில் உள்ள காட்டுப்பள்ளி மற்றும் எண்ணூர் மற்றும் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என மொத்தம் 15 துறைமுகங்கள் மற்றும் முனையங்களை இயக்கி வருகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications