வியட்நாம் நாட்டில் சம்பவம் செய்த அதானி.. அது 4வது அதிரடி வெளிநாட்டுத் திட்டம்..!

சென்னை: இந்தியா உற்பத்தி துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில், இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குப் பொருட்களை மிகவும் குறைந்த செலவில் கொண்டு வரவும் கப்பல் போக்குவரத்து மிகவும் முக்கியமாகும்.

இதேபோல் சர்வதேச சரக்கு போக்குவரத்தில் சீனா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையில் இத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இலக்குடன் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றாக இருக்கும் அதானி குழுமம் களமிறங்கியுள்ளது.

வியட்நாம் நாட்டில் சம்பவம் செய்த அதானி.. அது 4வது அதிரடி வெளிநாட்டுத் திட்டம்..!

இந்தியாவில் பல துறைமுகங்களைத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ள அதானி குழுமம், தற்போது வியட்நாமில் ஒரு துறைமுகம் கட்ட திட்டமிட்டுள்ளது.

அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனத்தின் (Adani Ports and Special Economic Zone Ltd.) நிர்வாக இயக்குநர் கரண் அதானி, அளித்த பேட்டியில், "வியட்நாம் அரசாங்கத்திடமிருந்து Da Nang பகுதியில் புதிய துறைமுகம் கட்ட ஆரம்பக்கட்ட ஒப்புதல் (in-principle approval) பெறப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் கண்டைனர் முனையங்கள் (container terminals) மற்றும் பல்வேறு வகையான சரக்குகளைக் கையாளும் பலதரப்பட்ட சரக்கு முனையங்களை (multipurpose berths) அமைக்கும் திட்டத்தைக் கொண்டு உள்ளது என்றும், இத்துறைமுகத்திற்கான திட்டம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், மொத்த முதலீட்டுத் தொகை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அதானி குழுமம் வெளிநாட்டில் துறைமுகம் அமைப்பது இது புதியது இல்லை. இதற்கு முன்பு இஸ்ரேலின் ஹைஃபா (Haifa), இலங்கையின் கொழும்பு (Colombo), டான்சானியாவின் டார் எஸ் சலாம் (Dar es Salaam) துறைமுகம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அதானி குழுமத்திற்கு இது 4 வது சர்வதேச துறைமுகமாகும்.

வியட்நாம் நாட்டில் சம்பவம் செய்த அதானி.. அது 4வது அதிரடி வெளிநாட்டுத் திட்டம்..!

இந்தியாவை ஒரு கடல் வணிக மையமாக மாற்றுவதே எங்கள் முக்கிய இலக்கு என்று கூறினார் கௌதம் அதானியின் மூத்த மகனான கரண் அதானி. அதிகப்படியான உற்பத்தி அளவைக் கொண்ட அல்லது அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளை நாங்கள் முக்கிய இலக்காகக் கொண்டுள்ளோம். இது அதிக நுகர்வுக்கு வழிவகுக்கும். இந்த நாடுகளில் ஏற்றுமதி அளவை அதிகரிப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம் என்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் வர்த்தக முறையை விளக்கினார்.

இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக ஆபரேட்டராக இருக்கும் அதானி போர்ட்ஸ் நிறுவனம் சர்வதேச நடவடிக்கைகளில் இருந்து சுமார் 5% மொத்த லாபத்தைப் பெறுகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்த அளவீட்டை 10% ஆக உயர்த்துவதற்கு இந்த நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகக் கரண் அதானி தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+