அதானி குழும நிறுவனம் தொடர்ந்து கடனை திரும்ப செலுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. அதானி குழுமத்தின் சில பங்குகளை அடகு வைத்து கடனாக பெற்ற 1114 மில்லியன் டாலர் மதிப்பிலான கடனுக்கு இன்னும் கால அவகாசம் இருந்தும் திரும்ப செலுத்தியுள்ளது. இதுவே இன்று அதானி குழும பங்குகள் ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.
அதானி ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையால் தொடர் சரிவினைக் கண்டு வந்த, அதானி குழும பங்குகளின் சரிவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
இதற்கிடையில் தான் இன்று அதானி குழும பங்குகள் 25% வரையில் ஏற்றம் கண்டன.
நம்பிக்கையை அதிகரிக்க திட்டம்
இதற்கிடையில் தற்போது முதலீட்டாளர்களுக்கு இன்னும் நம்பிக்கை அளிக்கும் விதமாகவும், நம்பிக்கை கொடுக்கும் விதமாகவும் அதானி குழுமம் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் கடன் பத்திரங்கள் மூலமாக வாங்கிய கடன், மற்ற கடன்களை திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரன் அதானி தெரிவித்துள்ளார்.
கடனை அடைக்க திட்டம்
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதானி போர்ட்ஸ் நிறுவனம் அடுத்த நிதியாண்டில் 5000 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அதானி குழும நிறுவனத்தின் மொத்த கடன் விகிதம் 39,277 கோடி ரூபாயாக உள்ளது.
மொத்த கடனையும் திரும்ப செலுத்த திட்டம்
அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் 2024ம் நிதியாண்டில் அதன் எபிட்டா விகிதம், 14,500 கோடி ரூபாய் - 15,000 கோடி ரூபாயினை இலக்காக வைத்துள்ளது.
மொத்த கடனை திருப்பிச் செலுத்துவது குறித்து நாங்கள் பரிசீலனை செய்து வருகிறோம். எனினும் சுமார் 5000 கோடி ரூபாய் மதிப்பிலான கடனை முன் கூட்டியே திரும்ப செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடனை குறைக்க திட்டம்
எங்களின் நிகர கடனை குறைத்து வளர்ச்சியினை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என கரன் அதானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் சிறந்த தனியார் போர்ட் நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம், அன்னிய செலவாணி இழப்புகள் அதிகரித்ததால், குறைந்த லாபத்தினை பதிவு செய்துள்ளது. எனினும் இதன் வலுவான எதிர்கால திட்டங்கள் மேற்கொண்டு வளர்ச்சியினை ஊக்குவிக்கின்றன.
அதானியின் திட்டம்
இந்த நிறுவனம் ஹிண்டர்ன்பர்க் ஆய்வறிக்கையானது வெளியான நிலையில், தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்தது. இந்த நிலையில் அதானி குழுமத்தின் சாமர்த்தியமான வியூகத்தினாலும், திட்டத்தினால் அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை மேற்கொண்டு அதிகரிக்கவும் அதானி திட்டமிட்டு வருகின்றது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications