கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் மிகவும் முக்கியமான நிறுவனமாக விளங்கும் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டல நிறுவனம் சுமார் 1,500 கோடி ரூபாய் அளவிலான கடனைத் திருப்பிச் செலுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 1000 கோடி ரூபாய் கடனை மார்ச் மாதம் கமர்சியல் பேப்பர் கடனை திருப்பிச் செலுத்தும்.
அதானி குழுமம், SBI மியூச்சுவல் ஃபண்டு நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாயும், ஆதித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்ட் நிறுவனத்திற்கு 500 கோடி ரூபாயும் திட்டமிட்டபடி திங்களன்று முதிர்ச்சியடைந்த தனது கமர்சியல் பேப்பர் கடன்களுக்கு திருப்பி செலுத்தியுள்ளது.
கமர்சியல் பேப்பர் என்பது நிறுவனங்களால் வழங்கப்படும் பாதுகாப்பற்ற, குறுகிய கால கடன் திட்டம். இந்தியாவில் இந்த கமர்சியல் பேப்பர் மூலம் ஒரு வருடம் வரையிலான கடனை பெற முடியும்.
அதானி குழுமம்
அதானி குழுமம் தற்போதுள்ள ரொக்க இருப்பு மற்றும் வணிக நடவடிக்கைகளில் இருந்து உருவாக்கப்பட்ட நிதியிலிருந்து கமர்சியல் பேப்பர் வாயிலாக பெற்ற கடனில் ஒரு பகுதியை முன்கூட்டியே செலுத்தியுள்ளது என அதானி போர்ஸ் & SEZ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
மூலதனம் மற்றும் பணப்புழக்கம்
இதன் கடனை முன்கூட்டியே செலுத்தியதன் மூலம் அதானி குழுமத்தின் விவேகமான மூலதனம் மற்றும் பணப்புழக்க மேலாண்மை திட்டத்தின் மீது சந்தை வைத்துள்ள நம்பிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டப்படுகிறது எனவும் அதானி போர்ஸ் & SEZ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
எஸ்பிஐ மியூச்சவல் பண்ட்
இந்த நிலையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா மியூச்சவல் பண்ட் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இதற்கு மேல் அதானி குழுமத்திற்கு எவ்விதமான கடன் வெளிப்பாடும் இல்லை என தெரிவித்துள்ளார்.
எங்க கணக்கு முடிந்தது
SBI MF அதானி குழுமத்திற்கு சுமார் 1,000 கோடி ரூபாய் அளவிலான கடனை கொடுத்திருந்தது, இந்த கமர்சியல் பேப்பர் திட்டம் முதிர்ச்சி அடைவதற்குள் திருப்பிச் செலுத்தப்பட்டது. இதன் மூலம் அதானி குழுமத்திற்கு SBI MF-க்கு எவ்விதமான கடன் வெளிப்பாடு இல்லை என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் வங்கி தரப்பில் இருந்து பல ஆயிரம் கோடி கடன் கொடுக்கப்பட்டு உள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச் வைத்த புள்ளி
ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கைக்கு பின்பு போர்ப்ஸ், விக்கிப்பீடியா ஆகியவை அதானி குழுமத்தின் மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வரும் வேளையில், பல அமைப்புகள் அதானி குழும நிறுவனங்களின் தரத்தை குறைத்தது.
டாப் 25 நிறுவனங்கள் பட்டியல்
இதன் வாயிலாக அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் நிலையில் இந்திய பங்குச்சந்தையில் அதிக மதிப்புடைய டாப் 25 நிறுவனங்கள் பட்டியலில் ஒரு நிறுவனம் கூட இல்லாமல் உள்ளது.
அதானி குழும சந்தை மதிப்பு
இது மட்டும் அல்லாமல் செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 10 நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 8.09 லட்சம் கோடி அதாவது 100 பில்லியன் டாலர் என்ற முக்கியப் பென்ச்மார்க் அளவீட்டை இழந்து தற்போது வெறும் 98 பில்லியன் டாலராக இருந்தது. இது ஹெச்டிஎப்சி வங்கியின் சந்தை மதிப்பை விடவும் குறைவாக உள்ளது.
40000 கோடி ரூபாய் இழப்பு
புதன்கிழமை பதிவான மோசமான வர்த்தகத்தில் கூடுதலாக 40000 கோடி ரூபாய் சந்தை மதிப்பீட்டை அதானி குழுமம் இழந்துள்ளது, இதனால் கூடுதலாக 4.5 பில்லியன் டாலர் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.


Click it and Unblock the Notifications