ஒட்டுமொத்த தென்னிந்தியாவில் சென்னை முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாக இருக்கும் வேளையில் இந்தியாவில் மிகப்பெரிய துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் சென்னை துறைமுகத்திற்கு 30 கிமீ தொலைவில் இருக்கும் அதன் எண்ணூர் கன்டெய்னர் முனையத்தின் பெரும் பகுதி பங்குகளை விற்பனை செய்துள்ளது.
அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் (ஏஇசிடிபிஎல்) நிறுவனத்தின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்காக, உலகளவில் கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுகச் சரக்குக் கையாளுதலில் முன்னோடியாக இருக்கும் MSC எனப் பிரபலமாக அழைக்கப்படும் மெடிட்டரேனியன் ஷிப்பிங் கம்பெனியின் முதலீட்டு நிறுவனமான டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் (TiL) உடன் இரண்டாவது முக்கியக் கூட்டணி ஒப்பந்தத்தைச் செய்துள்ளது.

அதானி போர்ட்ஸ் & SEZ வெளியிட்டுள்ள அறிக்கையின் படி டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட் நிறுவனம் தற்போது அதானி போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெரும் பகுதி பங்குகளை அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் நிறுவனத்தில் இருந்து வாங்க உள்ளது.
டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் இந்த முதலீட்டை நேரடியாகச் செய்யாமல் தனது கிளை நிறுவனமான Mundi Ltd மூலம் 247 கோடி ரூபாய் முதலீடு செய்து அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க உள்ளது. TiL என்பது உலகின் மிகப்பெரிய கொள்கலன் கப்பல் வரிசையான MSC இன் கூட்டாளியாகும்.
இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வணிகத் துறைமுகமான முந்த்ரா துறைமுகத்தில் CT3 கன்டெய்னர் முனையத்தை இயக்க, அதானி இன்டர்நேஷனல் கன்டெய்னர் டெர்மினல் மற்றும் டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் 2013ல் முதல் முறையாகக் கூட்டணி சேர்ந்தது. இதைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது கூட்டு முயற்சியைத் துவங்கியுள்ளது.
அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் இந்த ஒப்பந்தத்தில் சுமார் 1211 கோடி ரூபாய்க்கு மதிப்பிடப்பட்டு இருக்கும் வேளையில், இக்கூட்டணி ஒப்பந்தத்திற்குப் பின்பு 51 சதவீத பங்குகளை அதானி போர்ட்ஸ் மற்றும் 49 சதவீத பங்குகளை டெர்மினல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனத்தின் Mundi நிறுவனமும் பெற உள்ளது.
அதானி எண்ணூர் கன்டெய்னர் டெர்மினல் சுமார் 400 மீட்டர் quay அளவீட்டையும், வருடத்திற்கு 0.8 மில்லயன் 20 அடி சரக்கு கன்டெய்னர்-களைக் கையாளும் திறன் கொண்டு உள்ளது. நடப்பு நிதியாண்டில் 8 மாதத்தில் 0.45 மில்லியன் 20 அடி சரக்கு கன்டெய்னர் கையாண்டுள்ளது.


Click it and Unblock the Notifications