பில்லியனர் ஆன கெளதம் அதானியின் தலைமையிலான அதானி போர்ட்ஸ் & செஸ் நிறுவனம் திங்கட்கிழமையன்று 1500 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தியுள்ளது.
இன்னும் பெரும் கடனை விரைவில் செலுத்தும் என அறிவித்துள்ளது. அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கையானது, அதானி குழும நிறுவனங்கள் மீது ஹிண்டர்ன்பர்க் ஆய்வு நிறுவனம் பல மோசடிகளையும், குற்றச்சாட்டுகளையும் முன் வைத்த நிலையில் வந்துள்ளது.
நம்பிக்கை சரிவு
ஜனவரி 24 அன்று இந்த குற்றச்சாட்டு அறிக்கையானது வெளியான நிலையில், அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 130 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இத்தகைய சூழலுக்கு மத்தியில் தொடர்ந்து அதானி குழுமத்தில் உள்ள பல நிறுவனங்கள் இன்றும் சரிவினைக் கண்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் மத்தியில் இழந்த நம்பிக்கையை மீட்கும் பொருட்டு அதானி குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
கடனை அடைக்க திட்டம்
அதில் ஒரு முக்கிய நடவடிக்கை கடனை திரும்ப அடைப்பது. குறிப்பாக முன் கூட்டியே கடனை திரும்ப செலுத்தவும் முயற்சி எடுத்து வருகின்றது. அந்த வகையில் அதானி குழுமத்தின் முன்னணி நிறுவனமான அதானி போர்ட்ஸ் எஸ்பிஐ மியூச்சுவல் பண்டுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையான 1500 கோடி ரூபாயினை திரும்ப செலுத்தியுள்ளது.
குறுகிய கால கடன்
இதற்கிடையில் அடுத்த மாதம் செலுத்த வேண்டிய குறுகிய கால கடனான 1000 கோடி ரூபாயினை விரைவில் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிகப்பெரிய தனியார் துறைமுக ஆப்ரேட்டனரான அதானி போர்ட்ஸ், அதற்கு தேவையான மூலதன செலவுக்காகவும், நிதி இருப்புக்காகவும் குறுகிய கால கடன் மூலம் நிதி திரட்டியுள்ளது. இந்த நிதியினைத் தான் தற்போது முன் கூட்டியேவும் செலுத்த திட்டமிட்டுள்ளது.
நம்பிக்கையை அதிகரிக்கலாம்
இவ்வாறு முன் கூட்டியே திட்டமிடப்பட்டுள்ள இந்த கடன் ஆனது நிறுவனத்தின் வணிக செயல்பாட்டிற்காக வைத்திருந்த பணம் அல்லது கையிருப்பாக வைத்திருந்த பணமாகவும் இருக்கும் என தெரிகிறது. இது நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டமிடப்பட்ட ஒன்று
இந்த அறிவிப்பானது நிறுவனம் 5000 கோடி ரூபாய் கடனை அடைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ள நிலையில் வந்துள்ளது. இது அதன் கடனை திரும்ப செலுத்துவது, கடந்த ஆண்டினை காட்டிலும் 3 மடங்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதானி குழுமத்தின் இந்த நடவடிக்கைகள், ஹிண்டர்ன்பர்க் அறிக்கையானது வந்த நிலையில், அதானி குழுமத்தின் பரிவர்த்தனைகள் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் தான் இப்படி ஒரு நடவடிக்கையும் வந்துள்ளது. எப்படியிருப்பினும் அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.
பங்கு விலை இன்று எப்படி?
நிறுவனத்தின் தேவைப்படும் பணம் மறு நிதியளிப்பதில் எந்த பிரச்சனையும் கிடையாது. பணப்புழக்கத்திலும் எந்த பிரச்சனையும் கிடையாது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகவே, அதானி குழுமம் அதிரடியான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இதற்கிடையில் அதானி போர்ட் நிறுவனத்தின் பங்கு விலையானது இன்று, 1.13% அதிகரித்து, 589.15 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
மற்ற பங்குகளின் நிலை?
எனினும் அதானி குழுமத்தின் மற்ற பங்குகள் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றன. அதானி கிரீன் பங்கு விலையானது சுமார் 70% ஹிண்டர்ன்பர்க் அறிக்கைக்கு பிறகு சரிவில் காணப்படுகின்றது. எனினும் அதானி பவர், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது ஏற்றத்தில் காணப்படுகின்றது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications