இஸ்ரேல் ஹைஃபா துறைமுக நகரில் ஏவுகணை தாக்குதல்.. கதறும் கௌதம் அதானி.. ஏன் தெரியுமா..?

ஹிஸ்புல்லா - இஸ்ரேல் - ஹமாஸ் இடையே தொடர்ந்து நீடிக்கும் போர், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகத்தைக் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலையில் லெபனானில் இருந்து ஏவப்பட்ட 15 ராக்கெட்டுகள் இஸ்ரேல் நாட்டின் துறைமுக நகரமான ஹைஃபா-வை தாக்கியுள்ளதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

முதல் முறையாக இஸ்ரேல் நாட்டில் வடக்கு பகுதியான ஹைஃபா மக்கள் ஏவுகணைகள் தங்கள் பகுதியை தாக்குவதை பார்த்துள்ளனர். இதன் மூலம் ஹிஸ்புல்லா - இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடக்கு தாக்குதல்களில் ஹைஃபா துறைமுகம் முக்கிய டார்கெட்டாக மாறக்கூடும் என்பதால் கூடுதல் அச்சம் நிலவுகிறது. ஹைஃபா துறைமுகத்திற்கும், அதானி குழுமத்திற்கும் மிக முக்கியமான தொடர்பு உள்ளது.

இஸ்ரேல் ஹைஃபா துறைமுக நகரில் ஏவுகணை தாக்குதல்.. கதறும் கௌதம் அதானி.. ஏன் தெரியுமா..?

இந்த ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்கும் 1.18 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஏல திட்டத்தை அதானி குழுமத்துடன் இணைந்து கடோட் குழுமம் வென்றது மூலம், 2022 டிசம்பரில் இஸ்ரேல் அரசிடமிருந்து ஹைஃபா போர்ட் லிமிடெட் நிறுவனத்தை கையகப்படுத்தியது. இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, அதானி போர்ட்ஸ் நிறுவனம் இஸ்ரேல் அரசுக்கு சுமார் 785 மில்லியன் டாலர் முதலீடு செய்து வருகிறது.

இஸ்ரேல் நாட்டிற்கு ஹைஃபா துறைமுகம் மிகவும் முக்கியமானது. இந்நாட்டின் கடல் வழியான மொத்த சரக்கு ஏற்றுமதியில் சுமார் 99% ஹைஃபா துறைமுகம் மூலமாகவே உலக நாடுகளுக்குச் செல்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் தற்போது இங்கு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

ஹைஃபா மீதான தாக்குதல் மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது இஸ்ரேல் நாட்டின் கடற்படை தளம் மட்டுமல்ல, ரசாயனத் தொழில் துறையும் இங்கு தான் உள்ளது. இன்றைய தாக்குதல் இஸ்ரேல் ராணுவத்திற்கு புது விதமானதாக உள்ளது, எப்போதும் எல்லையில் தான் இரு தரப்புக்கும் தாக்குதல் நடக்கும். ஆனால் இந்த முறை இஸ்ரேல்-க்கு பொருட்சேதம் தாண்டி வர்த்தக பாதிப்பையும் அதிகரிக்க இத்தகைய திட்டத்தைத் தீட்டியுள்ளது.

கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்தின் துறைமுக பிரிவான அதானி போர்ட்ஸ் நிறுவனம் இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஹைஃபா துறைமுகத்தைச் சொந்தமாக வைத்துள்ளது. இந்த துறைமுகத்தில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் வேளையில் லெபனான் தாக்குதல் மூலம், அதானி போர்ட்ஸ் பங்குகள் 2.62% வரை சரிந்துள்ளன.

இருப்பினும், அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் மொத்த கார்கோ வர்த்தக அளவில் ஹைஃபா துறைமுகத்தின் பங்கு வெறும் 3% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஹைஃபா துறைமுகத்தின் கார்கோ அளவை 10 முதல் 12 மில்லியன் டன்னாக அதிகரிக்கத் திட்டமிட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது. APSEZ நிறுவனத்தின் மொத்த கார்கோ அளவு 370-390 மில்லியன் மெட்ரிக் டன்னாக உள்ளது.

இந்த போர் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்திய முதலீடுகளின் பாதுகாப்பு குறித்துப் பல கேள்விகள் எழுந்துள்ள நிலையில், பல இந்திய நிறுவனங்களின் பங்குகள் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. கடந்த 2 வாரத்தில் நடந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் நாட்டில் முதலீடு செய்துள்ள 14 நிறுவனங்கள் பெரும் அச்சத்தில் உள்ளது.

அதானி போர்ட்ஸ், சன் பார்மா, டாக்டர் ரெட்டி, லுபின், என்எம்டிசி சுரங்கம், கல்யாண் ஜூவல்லரிஸ், டைட்டன், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), விப்ரோ, டெக் மஹிந்திர, இன்ஃபோசிஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), லார்சன் & டவுப்ரோ (L&T), ஆசியன் பெயிண்ட்ஸ், பெர்ஜர் பெயிண்ட்ஸ், அப்போலோ டயர்ஸ், MRF மற்றும் JK டயர் இப்படி இஸ்ரேல் நாட்டில் துறைமுகம், பார்மா, சுரங்கம், நகை மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் ஈடுபட்டுள்ள 14 இந்திய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் பாதிக்குமான என்ற அச்சத்தில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கணித்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+