அதானிக்கு அடுத்தடுத்து வரும் சிக்கல்.. ஆஸ்திரேலியாவை அடுத்து மியான்மரிலும் பிரச்சினை.. 14% சரிவு!

மியான்மர் ராணுவத்துடன் வர்த்தக தொடர்பு உள்ளதால், அமெரிக்காவின் எஸ் & பி குறியீட்டில் இருந்து அதானி போர்ட்ஸ் பங்குகளை நீக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி துறைமுக மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமான அதானி போர்ட்ஸ், கடந்த ஆண்டில் கொரோனாவுக்கும் மத்தியிலும் கூட, நல்ல ஏற்றத்தினை கண்டது.

இதற்கிடையில் மனித உரிமைகளை மீறி செயல்படும், மியான்மர் ராணுவத்துத்துடன் வர்த்தக தொடர்பில் உள்ளது. மியான்மரில் தற்போது ராணுவம் ஆட்சியை கைபற்றியுள்ளது. பல அமைச்சர்களை கைது செய்து காவலில வைத்துள்ளது. அது மட்டும் அல்லாது, இதனை எதிர்க்கும் மக்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

மியான்மர் ராணுவத்துடன் ஒப்பந்தம்

மியான்மர் ராணுவத்துடன் ஒப்பந்தம்

இதற்கிடையில் தான் கவுதம் அதானியின், அதானி போர்ட்ஸ் நிறுவனம் மியான்மரில் துறைமுகப் பணிகளை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 290 மில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்தை மியான்மர் ராணுவம் அதானி நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கு தான் தற்போது அமெரிக்காவின் எஸ் & பி டவ் ஜோன்ஸ் கடும் எதிர்ப்பினை தெரிவித்துள்ளது.

Array

Array

அதுமட்டும் அல்ல, மனித உரிமைகளை மீறிய மியான்மர் இராணுவத்துக்கு, அதானி நிறுவனம் ஆதரவளிப்பதையே இது சுட்டிக் காட்டுகிறது. இந்த நிலையில் ஏப்ரல் 15 முதல் அதானி போர்ட்ஸ் நிறுவனம் எஸ் & பியில் இருந்து நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தான் Adani Ports and Special Economic Zone Ltd நிறுவனம், 1.83% வீழ்ச்சி கண்டு, 731.05 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

கொரோனா காலத்திலும் ஏற்றம்

கொரோனா காலத்திலும் ஏற்றம்

இன்று காலையில் இதன் பங்கின் விலையானது கிட்டதட்ட 5% வீழ்ச்சி கண்டிருந்தது. கடந்த இரண்டு வர்த்தக தினங்களில் சுமார் 14% வீழ்ச்சி கண்டுள்ளது. சமீபத்திய மாதங்களில் கொரோனாவின் தாக்கம் இருந்த நிலையிலும் கூட, அதானி போர்ட்ஸின் பங்குகளின் விலையானது பட்டையை கிளப்பிக் கொண்டு ஏற்றம் கண்டு வந்தது. ஆனால் இதே காலகட்டத்தில் சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிந்தது.

ஆஸ்திரேலிய பிரச்சனை

ஆஸ்திரேலிய பிரச்சனை

ஏற்கனவே ஆஸ்திரேலியா அரசின் உத்தரவுடன் அதானி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் நிலக்கரி சுரங்கம் தோண்ட சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி கிடைத்தது. இதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் பிறப்பிக்கப்பட்டது முதல் கொண்டே ஆஸ்திரேலியாவில், இதற்கு எதிரான போராட்டங்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.

ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலிய மக்கள் எதிர்ப்பு

இதற்காக கடந்த ஆண்டில் இந்தியா ஆஸ்திரேலியா ஒரு நாள் போட்டி நடந்த மைதானத்திலேயே எதிர்ப்புகள் கிளம்பியது. முதலில் ஆஸ்திரேலிய வங்கிகள் மூலம் நிதி திரட்ட முயற்சித்த அதானி, அது தோல்வியில் முடிந்த நிலையில், பின்னர் உலகின் பல வங்கிகளும் இதற்காக கடன் கொடுக்க மறுத்தன. ஆஸ்திரேலிய வங்கிகள் மட்டும் அல்ல, பார்கிலேஸ், ஜேபி மார்கன், சிட்டி பேங்க், ஹெச்எஸ்பிசி, பிஎன்பி பரிபாஸ், ஆர்பிஎஸ் உள்ளிட்ட உலக வங்கிகள் கூட, அதானிக்கு கடனை நிராகரித்து விட்டன.

வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்

வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம்

குறிப்பாக மக்கள் எதிர்ப்பு, சுற்றுசூழல் பிரச்சனை பொருளாதார சாத்தியக்கூறு என்பதும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் ஆரம்பத்தில் 16 பில்லியன் டாலர் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தினை 2 பில்லியனாக குறைத்துக் கொண்டது அதானி குழுமம். இப்படி அதானிக்கு அடுத்தடுத்து பிரச்சினைகள் வந்து கொண்டுள்ள நிலையில், இன்னும் ஏன் இந்திய சந்தையில் இருந்து நீக்கம் செய்யப்படவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது பலத்த சரிவினைக் கண்டு வருகின்றது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+