அதானியின் புதிய முதலீடு.. ரூ.1050 கோடி மூலம் தமிழ்நாட்டு நிறுவனத்திலும் கால்பதித்த அதானி.. எப்படி?

இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் பில்லியனரான கெளதம் அதானியின், அதானி போர்ட்ஸ் நிறுவனம், இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்காக ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பானது 1050 கோடி ரூபாயாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின், 49.38% பங்கினை அதானி குழுமம் வாங்கவுள்ளது.

மிகப்பெரிய சேமிப்பு வசதிகள்

மிகப்பெரிய சேமிப்பு வசதிகள்

அதானியின் அதானி போர்ட்ஸ் நிறுவனம், நாட்டின் மிகப்பெரிய திரவ சேமிப்பு வசதிகளை கொண்டுள்ள நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில்டேங்கிங் லிமிடெட் நிறுவனத்தின், துணை நிறுவனமான (71.57% பங்கினை கொண்டுள்ள நிறுவனம்), ஐஓடி உட்கல் எனர்ஜி சர்வீசஸ் ஆகும். (IOT Utkal Energy Services). இந்த நிறுவனத்திலும் கூடுதலாக 10% பங்குகளை வாங்கும் என்பதும், இந்த ஒப்பந்தத்தில் அடங்கும் என அதானி குழுமம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

6 டெர்மினல்கள்

6 டெர்மினல்கள்

கடந்த 26 ஆண்டுகளில் இந்தியன் ஆயில்டேங்கிங் நிறுவனம் சுத்திகரிக்கப்பட்ட முழுமையான பெட்ரோலிய பொருட்களை சேமிப்பதற்காக ஐந்து மாநிலங்களில் 6 டெர்மினல்களை கொண்டுள்ளது.

இந்தியன் ஆயில்டேங்கிங்கிற்கு சொந்தமானவற்றில் மகாராஷ்டிராவில் நவ்கர் முனையம், சட்டீஸ்கரில் உள்ள ராய்பூர் முனையம், கோவா முனையம் ஆகியவையும் அடங்கும்.

பராமரிப்பு & செயல்பாடு ஒப்பந்தம்

பராமரிப்பு & செயல்பாடு ஒப்பந்தம்

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடனான BOOT முனையம் பாரதீப்பில் (ஒடிசாவில்) உள்ளது. இது தவிர இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உடனான செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு ஒப்பந்தங்கள் JNPT (மகராஷ்டிரா) மற்றும் குஜராத்தில் DUMAD ஆகியவையும் அடங்கும்.

நாமக்கல்லில்

நாமக்கல்லில்

இந்த நிறுவனம் தமிழகத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பயோ கேஸ் ஆலை ஒன்றையும் கொண்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 15 டன் உற்பத்தி திறனையும் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்திலும் அதானியின் முதலீடு வந்துள்ளது எனலாம்.

கரண் அதானியின் கருத்து

கரண் அதானியின் கருத்து

இந்த பங்கு வாங்குவது குறித்து அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும், முழு நேர இயக்குனருமான கரண் அதானி கூறுகையில், இந்த ஒப்பந்தத்தின் மூலம் நிறுவனத்தின் சேமிப்பு திறன் என்பது 200% அதிகரித்து, 3.6 மில்லியன் கிலோ லிட்டர்களாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் அதானி மூன்றாவது பெரிய திரவ சேமிப்பு நிறுவனமாக மாறியுள்ளது. இது உலகளவில் மிகப்பெரிய போக்குவரத்து பயன்பாடாக மாறுவதற்கான, எங்கள் லட்சியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் கவனம்

நிறுவனத்தின் கவனம்

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளருடனான ஐஓசிஎல் உடனான நமது கூட்டாண்மையை வலுப்படுத்தும். தொடர்ந்து அதானி குழும, நிறுவனத்தின் சேவையினை விரிவுபடுத்தி வருகின்றது. இதன் மூலம் மார்ஜினை மேம்படுத்த கவனம் செலுத்தி வருகின்றது.

BOOT ஒப்பந்தம்

BOOT ஒப்பந்தம்

நாட்டின் எண்ணெய் பொருட்களுக்கான தேவை என்பது அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் தான் IOTL வளர்ச்சி பாதையில் உள்ளது. அண்மையில் நிறுவனம் 25 ஆண்டுகால BOOT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது பாரதீப் துறைமுகத்தில் உள்ள 0.6 மில்லியன் கிலோலிட்டர் கச்சா எண்ணெய் தொட்டிகளை நிர்மாணித்தல், இயக்குதல் மற்றும் பாரமரிப்புகளை செய்யவும் நுமாலிகர் சுத்திகரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

மாபெரும் வெற்றி

மாபெரும் வெற்றி

இது மட்டும் அல்ல, நிறுவனம் இன்னும் ஏராளமான பல பெரிய திட்டங்களையும் பல நிறுவனங்களுடன் போட்டிப் போட்டு வருகின்றது. பலவற்றை ஏலத்தில் எடுத்து வருகின்றது. மொத்தத்தில் அதானியின் விஸ்வரூப வெற்றிக்கு இது மாபெரும் காரணமாக அமையலாம் எனலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+