இந்திய பங்குச்சந்தையில் கடந்த 2 வாரத்தில் அதிகளவிலான லாபத்தைப் பெற்றது அதானி குழும முதலீட்டாளர்கள் தான், அதானி - ஹிண்டன்பர்க் விவகாரத்தில் தலைமை நீதிபதியின் பேச்சு, அதானி குழுமம் இலங்கையில் கட்டும் துறைமுகத்தில் பெரும் நிதியுதவியைக் கொடுத்த அமெரிக்க நிறுவனத்தின் சர்டிபிகேட் ஆகியவை சாதகமாக அமைந்தது.
இந்த நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய கடல்சார் நிறுவனமான அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ, ஒடிசாவில் உள்ள ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்திற்கு (SP Group) சொந்தமான கோபால்பூர் துறைமுகத்தை, 1100-1200 கோடி ரூபாய் வரையிலான பங்கு மதிப்பில் வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் பல துறைமுகங்களை அரசிடமும், தனியார் நிறுவனங்களிடமும் இருந்து வாங்கிக் கப்பல் மற்றும் சரக்கு நிர்வாகத்தில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ ஒடிசாவில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தைக் கைப்பற்றுவது மூலம் கிழக்கு மற்றும் மேற்கு இந்தியாவில் கப்பல் மற்றும் சரக்கு நிர்வாகத்தில் முக்கிய இடத்தை அடைய உள்ளது. இதோடு இந்தியாவின் கப்பல் போக்குவரத்தில் முக்கிய முத்துக்களை (துறைமுகங்கள்) இணைக்க உள்ளது அதானி குழுமம்.
அதானி போர்ட்ஸ் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் மத்தியிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்தால், அதானி போர்ட்ஸ் கைப்பற்றும் 6வது கையகப்படுத்தல் ஆகும். கிழக்குக் கடலோரத்தில் மட்டுமே அதானி போட்ர்ஸ் ஏற்கனவே சுமார் 247 மில்லியன் டன்கள் (MT) அளவிலான சரக்குகளைக் கையாளும் திறன் கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஒடிசாவில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தைக் கைப்பற்றுவது மூலம் கூடுதல் பலம் பெறும்.
ஒடிசாவில் உள்ள கோபால்பூர் துறைமுகத்தில், SP Ports Maintenance நிறுவனம் சுமார் 56 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மீதமுள்ள 44 சதவீத பங்குகளை ஒரிசா ஸ்டீவடோர்ஸ் (OSL) வைத்துள்ளது. ஆனால் தற்போது நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தை கட்டாயம் வெற்றி அடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
இதற்கு முக்கியமான காரணம் அக்டோபர் 26 அன்று, JSW இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இதே கோபால்பூர் துறைமுகத்தை ரூ. 3,000-கோடி மதிப்பீட்டில் கைப்பற்ற எஸ்பி குரூப் உரிமையாளரான மிஸ்திரி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.


Click it and Unblock the Notifications