இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான அதானி குழுமத்தின் துறைமுக நிறுவனமான அதானி போர்ட்ஸ் அண்ட் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ) கொல்கத்தாவில் உள்ள ஷியமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்ள கண்டைனர் கையாளும் டெர்மினல்-ஐ இயக்கவும் மற்றும் பராமரிக்கும் O&M ஒப்பந்தத்தைப் பெறுவதற்கான கடிதத்தை (Letter of Intent - LOI) பெற்றதாக அறிவித்துள்ளது.
அதானி போர்ட்ஸ் இந்த 5 ஆண்டு ஒப்பந்தத்தை ஏல செயல்முறையின் மூலம் பெற்றுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய துறைமுக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஆதானி போர்ட்ஸ் இந்தியாவில் இருக்கும் முக்கியமான துறைமுகங்களை அடுத்தடுத்து கைப்பற்றி வருகிறது.

ஷியமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்ள கண்டைனர் கையாளும் டெர்மினல்-ன் 5 ஆண்டு ஒப்பந்தம் கைப்பற்றியதன் மூலம் இறுதி ஒப்புதல் கடிதம் கிடைத்த 7 மாதத்திற்குள் சரக்குகளை கையாளும் இயந்திரத்தை நிறுவும் முக்கிய கண்டிஷன் வைக்கப்பட்டு உள்ளது.
கொல்கத்தா ஷியமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் தான் இந்தியா-வங்கதேச மத்தியில் நீர்வழி போக்குவரத்து மற்றும் வர்த்தக பாதைக்கான பரிந்துரைக்கப்பட்ட துறைமுகமாகும்.
இந்த துறைமுகத்தில் இருக்கும் நேதாஜி சுபாஷ் டாக் சிங்கப்பூர், போர்ட் கிளாங் மற்றும் கொழும்பு ஆகிய முக்கிய துறைமுகங்களில் இருந்து வழக்கமாகக் கப்பல் சேவைகளைப் பெறுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஷியமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் உள்ள கண்டைனர் டாக்கில் டெர்மினல் மற்றும் அதன் கொள்கலன் துறைமுகங்களுக்கு இடையே இணைப்பை மேம்படுத்தும்.
மேலும் இந்த ஆண்டுக்குள் விழிஞ்சம் மற்றும் கொழும்பு ஆகிய துறைமுகத்தைச் செயல்பாட்டிற்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த துறைமுகங்கள் உடன் கொல்கத்தா துறைமுகத்தை இணைத்து கப்பல் போக்குவரத்தை நாட்டில் மேம்படுத்தப்படும் என அதானி போர்ட்ஸ் நிறுவனம் பங்குச் சந்தையில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேதாஜி சுபாஷ் டாக் இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கண்டைனர் முனையமாகக் கருதப்படுகிறது. இது 2023-24 நிதிய ஆண்டில் சுமார் 0.63 மில்லியன் TEU களை (Twenty-foot Equivalent Unit) கையாண்டது.
இந்த முனையம் மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், அசாம், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நேபாளம், பூட்டான் போன்ற அண்டை நாடுகளுக்கும் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாக உள்ளது.
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில், அதானி போர்ட்ஸ் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 1,375 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது, நேற்றைய விலையை காட்டிலும் 1.63% அதிகமாகும். இந்த ஆண்டு அதானி போர்ட்ஸ் பங்கு விலை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications