இந்தியாவில் துறைமுக வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அதான் போர்ட்ஸ் ஒடிசாவின் கோபால்பூர் துறைமுகத்தில் 95 சதவீத பங்குகளை அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம் (APSEZ) நிறுவனம் சுமார் 1,349 கோடி ரூபாய்க்குக் கையகப்படுத்திய செய்தி முதலீட்டாளர்களை குஷிப்படுத்திய நிலையில் அடுத்த குட் நியூஸ் வந்துள்ளது.
இந்திய போட்டி ஆணையம் (CCI) செவ்வாய்க்கிழமை அன்று அதானி பவர் நிறுவனம் கடனில் மூழ்கி திவாலான லாங்கோ அமர்கண்டக் பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

திவாலான நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும், கார்ப்பரேட் கடன் தீர்மானம் சார்ந்த செயல்முறை (CIRP) மூலம் லாங்கோ அமர்கண்டக் நிறுவனத்தில் 100% பங்குகளையும் கட்டுப்பாட்டையும் கையகப்படுத்த அதானி பவர் நிறுவனம் முன்மொழிந்துள்ளதாக CCI தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ரூ.4,101 கோடிக்குக் கடனில் சிக்கியிருந்த லாங்கோ அமர்கண்டக் நிறுவனத்திற்கான ஏலத்தில் அதானி பவர் நிறுவனம் வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியான நிலையில், சிசிஐ அமைப்பு நாட்டின் வர்த்தகம் மற்றும் அதானி பவர் நிறுவனத்தின் போட்டித்தன்மையை கணக்கிட்டு இந்த முடிவை வெளியிட்டு உள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தலா 300 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்களைக் கொண்டுள்ள லாங்கோ அமர்கண்டக் கையகப்படுத்தியதன் மூலம் அதானி பவர் நிறுவனத்தின் மின்சார உற்பத்தி திறனை பெரிய அளவில் அதிகரிக்க முடியும்.
இந்த நிதியாண்டில் ஐபிசி தடம் வழியாக அதானி பவர் நிறுவனம் மேற்கொண்ட இரண்டாவதாக கைப்பற்றிய நிறுவனமான லாங்கோ அமர்கண்டக் உள்ளது. இதற்கு முன்னதாக, டிகேய் அல்டர்னேடிவ் இன்வெஸ்ட்மெண்ட் ட்ரஸ்ட்டுடன் இணைந்து கோஸ்டல் எனர்ஜனை (Coastal Energen) அதானி பவர் நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கோஸ்டல் எனர்ஜனுக்கான வெற்றி பெற்ற ஏலத்தின் மதிப்பு ரூ.3,450 கோடியாகும்.
அதானி பவர் நிறுவனம் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், சத்தீஸ்கார், ஜார்க்கண்ட் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முழுவதும் அனல் மின் நிலையங்களைக் கொண்டு மின்சார உற்பத்தி துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது.


Click it and Unblock the Notifications