அதானி குழுமம் தனது வர்த்தகத்தைப் பல்வேறு நிறுவன கைப்பற்றல் மூலம் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்தது.
இந்த நிலையில் அதானி பவர் நிறுவனம் சுமார் 7,017 கோடி ரூபாய் மதிப்பிலான டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், இந்தப் பரிவர்த்தனையை நிறைவு செய்யும் காலக்கெடு முடிவடைந்ததால் புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக டிபி பவர் நிறுவனத்தைக் கையகப்படுத்துவதில் இருந்து அதானி பவர் வெளியேறியுள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட அறிக்கையால் கௌதம் அதானியின் அதானி குழும நிறுவன பங்குகள் பெருமளவில் விற்கப்பட்டு அதன் மதிப்பு சரிந்த நிலையில், கௌதம் அதானி நிர்வாகம் மூலதனச் செலவினத் திட்டங்களை மதிப்பாய்வு செய்யும் வேளையில் DB பவர் நிறுவனத்தைக் கைப்பற்றும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது.
கௌதம் அதானி
கௌதம் அதானி தலைமையில் இயங்கி வரும் அதானி பவர் ஆகஸ்ட் 18, 2022 அன்று டிபி பவர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது, இந்த ஒப்பந்தம் வாயிலாக அக்டோபர் 31, 2022க்குள் உரியத் தொகையைக் கொடுத்துக் கைப்பற்றலை முடிக்கத் திட்டமிடப்பட்டது.
டிபி பவர்
அக்டோபர் 31 இறுதி நாளாக இருந்தாலும் காலக்கெடு மீண்டும் மீண்டும் நீட்டிக்கப்பட்டது, ஆனாலும் தற்போது இந்நிறுவனத்தைக் கைப்பற்ற முடியாமல் அதானி பவர் தோல்வி அடைந்துள்ளது. டிபி பவர் சத்தீஸ்கரின் ஜான்ஜ்கிர் சம்பா பகுதியில் 1,200 மெகாவாட் நிலக்கரி மூலம் இயங்கும் மின் உற்பத்தி நிலையத்தை வைத்துள்ளது. டிபி பவர் நிறுவனத்தின் கடன் உட்பட மொத்த மதிப்பு 7,017 கோடி ரூபாய்.
அதானி பவர்
டிபி பவர் நிறுவனத்தை அதானி பவர் வாங்க 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி ஒப்புதல் அளித்த நிலையில், செப்டம்பர் 29 ஆம் தேதி இந்திய போட்டி ஆணையம் இதற்கு ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் 31-ஐ கடைசி நாளாக அறிவித்தும், 4 முறை நீட்டிக்கப்பட்டு பிப்ரவரி 15, 2023 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.
பங்குச்சந்தை
இந்த நிலையில் அதானி பவர் நிறுவனம் பங்குச்சந்தையில் டிபி பவர் நிறுவனத்தைக் கைப்பற்றுவதற்கான காலக்கெடு முடிந்துள்ளது, இதனால் கைப்பற்றும் திட்டம் கைவிடப்படுவதாகத் தெரிவித்துள்ளது. இது அதானி குழுமத்திற்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.
அனல் மின் நிலைய கட்டமைப்பு
அதானி குழுமம் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் அனல் மின் நிலைய கட்டமைப்பை வைத்துள்ளது. இதன் மூலம் மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வு அளவுகள் மிகவும் அதிகமாக இருக்கும் வேளையில் இந்நிறுவனத்திற்கு DB பவர் மிகவும் முக்கியமானதாக விளங்கி வருகியது.
ஆஸ்திரேலியா நிலக்கரி
இதேபோல் அதானி குழுமத்தால் ஆஸ்திரேலியாவில் இருந்து நிலக்கரியை கொண்டு வர முடியும் காரணத்தால் டிபி பவர் மூலம் பெரிய அளவிலான வர்த்தகத்தையும், லாபத்தையும் அடைய முடியும். ஆனால் தற்போது மொத்த திட்டமும் தோல்வி அடைந்துள்ளது, ஜனவரி மாத இறுதியில் தான் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது, இதற்கு முன்பே 4 முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
SB எனர்ஜி இந்தியா
2011ல் அதானி குழுமம் சுமார் 26000 கோடி ரூபாய் முதலீட்டில் SB எனர்ஜி இந்தியா நிறுவனத்தைக் கைப்பற்றிய பின்பு டிபி எனர்ஜி கைப்பற்றும் 7017 கோடி ரூபாய் டீல் தான் மின்சாரத் துறையில் அதிகப்படியான மதிப்புடைய திட்டமாக விளங்குகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications