வெயிலை வைத்து லாபம் பார்க்கும் கௌதம் அதானி..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. பொதுமக்கள் யாரும் பகல் வேளையில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடியே கோரிக்கை விடுத்துள்ளார். ஏனெனில் வெப்ப அலையின் தாக்கம் அந்த அளவுக்கு மோசமாக உள்ளது. இந்த வெயில் தான் தற்போது கௌதம் அதானி சிறந்த லாபத்தை பெற்று தரும் ஒரு விஷயமாக இருக்கிறது.

கௌதம் அதானிக்கு சொந்தமான அதானி குழுமம் துறைமுகம், விமான நிலையம் என மட்டுமில்லாமல் புதுப்பிக்கதக்க எரிசக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் தொழிலிலும் ஈடுபடுகிறது. மின்சாரம் தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் அதானி குழுமம் விற்பனை செய்கிறது. அதானி பவர் (Adani Power) என்ற பெயரில் இந்த நிறுவனம் செயல்படுகிறது. கோடை வெயிலால் அதானி பவர் நிறுவனத்தின் மின்சார விற்பனை அதிகமாகி அதன் வருமானமும் அதிகரித்துள்ளது.

வெயிலை வைத்து லாபம் பார்க்கும் கௌதம் அதானி..!! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!!

இதனால் அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி பவர் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு (Market Capitalisation), இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பை விட அதிகமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இந்தியப் பங்குச்சந்தையில் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களின் பட்டியலில் அதானி பவர் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இன்போசிஸ் 12ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று நிலவரப்படி அதானி பவர் சந்தை மதிப்பு சுமார் 4.85 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது, ஒரு பங்கு விலை 252 ரூபாய் என புதிய உச்சம் தொட்டுள்ளது. அதே வேளையில் இன்போசிஸ் சந்தை மதிப்பு 4.72 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலை 126% வரை அசுர வளர்ச்சி கண்டு முதலீட்டாளர்களுக்கு இரட்டிப்பு லாபம் தந்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 5 மாதங்களில் இந்த பங்கின் மதிப்பு சுமார் 68% உயர்ந்துள்ளது.

Also Read

இந்தியாவின் பல பகுதிகளில் கோடைக்காலம் மற்றும் 'எல் நினோ' (El Niño) விளைவினால் கடுமையான வெப்ப அலை நிலவுகிறது. இதனால் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மின்சாரப் பயன்பாடு மற்றும் மின் தேவை வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்ததால், அதானி பவர் நிறுவனத்தின் மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டு லாபம் கடந்த ஆண்டை விட 64% உயர்ந்து 4,271 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது.

Recommended For You

அதானி பவர் நிறுவனம் தனது மின் உற்பத்தித் திறனை தற்போதுள்ள ~18 GW-லிருந்து 2030-க்குள் 31 GW ஆக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. உலக அளவில் நிறுவனங்கள் தங்களின் ஐடி செலவினங்களைக் குறைத்து வருவதால், இன்போசிஸ் போன்ற ஐடி நிறுவனங்களுக்குப் புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும், வருவாய் வளர்ச்சியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது இது பங்கு மதிப்பை சரிய வைத்துள்ளது. இதனால் சுமார் 20%க்கும் கீழ் இன்போசிஸ் பங்கு மதிப்பு சரிந்து அதன் சந்தை மூலதன மதிப்பு குறைந்துவிட்டது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+