அதானி குழுமம் குறித்து 32000 வார்த்தைகளில் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை மூலம் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை மதிப்பீட்டை இழந்தும், அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் ஆதானி சொத்து மதிப்பு 30 பில்லியன் டாலருக்குக் கீழ் குறைந்து உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியிலில் இருந்து வெளியேறினார்.
இந்த நிலையில் செபி அதானி குழுமத்தின் கடந்த ஒரு வருடம் செய்த அனைத்து ஒப்பந்தங்களையும், அதற்கான நிதி ஆதாரங்கள் எனப் பல கோணத்தில் ஆய்வு செய்ய உள்ளது.
இதற்கிடையிலும் அதானி குழுமம் தனது வர்த்தக விரிவாக்கத்தைக் கைவிடாமல் மீண்டும் புதிய வர்த்தகத்தைக் கைப்பற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
திவால்
இந்தியாவில் பல நிறுவனங்கள் கடனை செலுத்த முடியாமல் திவாலான நிலையில், வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் தங்களது வாராக் கடனை குறைக்க வேண்டும் என்பதற்காகத் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிறுவனங்களுக்குத் தீர்வு காணும் பணிகளை வேகப்படுத்தியுள்ளது.
GVK POWER
இந்த நிலையில் திவாலாக அறிவிக்கப்பட்ட GVK POWER என்னும் நிறுவனத்திற்குத் தீர்வு காண முடிவு செய்யப்பட்ட நிலையில், இந்நிறுவனத்தையும் அதன் சொத்துக்களையும் வாங்க விருப்பம் உள்ள அனைவரும் விண்ணப்பம் அளிக்க அறிவுறுத்தப்பட்ட நிலையில் பல நிறுவனங்கள் விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
12 நிறுவனங்கள்
இந்த நிலையில் Goindwal Sahib என்னும் பகுதியில் அமைந்துள்ள GVK POWER நிறுவனத்தை கைப்பற்ற அதானி பவர் நிறுவனம் விண்ணப்பம் கொடுத்துள்ளது. அதானி பவர் உடன் ஜின்டால் பவர், வேதாந்தா என மொத்தம் 12 நிறுவனங்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளது.
தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்
ஆக்சிஸ் வங்கி ஹைதரபாத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் தொடுத்த வழக்கின் மூலம் GVK POWER திவாலானதாக அறிவிக்கப்பட்டுத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
போட்டி
GVK POWER நிறுவனத்தில் பவர் பர்ச்சேஸ் ஒப்பந்தம் செய்துள்ள பஞ்சாப் மாநில மின்சார வாரியமும் இந்நிறுவனத்தைக் கைப்பற்ற விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து Sherisha Technologies, Refex Industries குரூப் நிறுவனம், மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ரஷ்மி மெட்டாலிக்ஸ், கேஎல்ஜே ரிசோர்சஸ், இந்தியா கோக் அண்ட் பவர், ஐலேப்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ், ஆர்கேஜி ஃபண்ட் மற்றும் கேப்ரி குளோபல் விருப்ப விண்ணப்பத்தைக் கொடுத்துள்ளது.
6584 கோடி ரூபாய்
GVK POWER சுமார் 12 நிறுவனங்களுக்கு 6584 கோடி ரூபாய் அளவிலான கடன் நிலுவையை வைத்துள்ளதாக KPMG நிறுவனத்தின் தீர்வு காணும் அதிகாரியான ரவி சேதியா தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications