அமெரிக்க முதலீட்டு நிறுவனமான GQG இந்தியாவில் தனது முதலீட்டை கொட்டி வரும் வேளையில், குறிப்பாக அதானி குழும நிறுவனங்களில் அடுத்தடுத்து பங்குகளை வாங்கி வரும் GQG புதிதாக ஒரு முதலீட்டை இன்று செய்துள்ளது. அதானி குழுமத்தின் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் அதானி பவர் பெரும் முதலீட்டை திரட்டியுள்ளது.
அதானி பவர் நிறுவனத்தில் சுமார் 8.1 சதவீத பங்குகளை அமெரிக்க முதலீட்டு நிறுவனமான GQG மற்றும் இதர சில முதலீட்டாளர்கள் இணைந்து சுமார் 1.1 பில்லியன் டாலர் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. கௌதம் அதானி தொடர்ந்து தனது வர்த்தகம், நிர்வாகம், பங்கு இருப்புகளை மறுசீரமைப்பு செய்து வரும் வேளையில் அதானி பவர் நிறுவனங்களின் பங்கு விற்பனை நடந்துள்ளது.

ஒருபக்கம் அதானி - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் குறித்த விசாரணையின் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் வேளையில், மறுபுறம் அடுத்தடுத்து பங்குகளையும், வர்த்தகத்தையும் விற்பனை செய்து வருகிறது. சமீபத்தில் அதானி குழுமம் அதானி கேப்பிடல் நிறுவனத்தை விற்றது, அதானி வில்மார் நிறுவனத்தை விற்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் சிறப்பாக இயங்கி வருவது மட்டும் அல்லாமல் பெரிய அளவில் விரிவாக்கம் செய்து வரும் அதானி பவர் நிறுவனத்தின் 8.1 சதவீத பங்குகளை 1.1 பில்லியன் டாலர் தொகைக்கு விற்கப்பட்டு உள்ளது. இந்த பங்குகளை GQG பார்ட்னர்ஸ் எமர்ஜிங் மார்கெட் பண்ட், கோல்டுமேன் சாச்சஸ் GQG பார்ட்னர்ஸ் இண்டர்நேஷ்னல் மற்றும் இன்னும் சில முதலீட்டாளர்கள் இணைந்து கைப்பற்றியுள்ளனர்.
அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர் குரூப் நிறுவனங்களான Worldwide Emerging Market Holding 1.2 சதவீத பங்குகளையும், Afro Asia Trade and Investments தன்னிடம் இருந்த மொத்த பங்குகளையும் விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் ப்ரோமோட்டர் குரூப் நிறுவனங்கள் மொத்தமாக இணைந்து 8.1 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.
ஜூன் 2023 நிலவரத்தின் படி Afro Asia Trade and Investments 6.88 சதவீத அதானி பவர் பங்குகளை வைத்திருந்தது, Worldwide Emerging Market Holding 5 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இதன் மூலம் அதானி குழுமத்தின் ப்ரோமோட்டர்கள் அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டி வருவது உறுதியாகியுள்ளது.
அதானி - ஹிண்டன்பர்க் ரிசர்ச் விவகாரத்திற்கு பின்பு அதானி குழுமத்திற்கு முக்கிய நிதி முதலீட்டாளராக GQG பார்ட்னர்ஸ் விளங்குகிறது. சுத்தி சுத்தி பல அதானி குழும நிறுவனத்தில் முதலீடு செய்து வருகிறது.


Click it and Unblock the Notifications