முதலீட்டாளர்களை ஆச்சரிய படுத்திய அதானி பவர்.. ஒரே நாளில் 9% ஏற்றம்..!

அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது இண்டிராடே வர்த்தகத்தில் (Intraday) 9 சதவீதத்திற்கும் மேலாக ஏற்றம் கண்டுள்ளது.

இது இந்த நிறுவனம் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த நிகரலாபம் பல மடங்கு அதிகரித்து 2,228.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளதையடுத்து, இந்த ஏற்றம் கண்டுள்ளது.

முதலீட்டாளர்களை ஆச்சரிய படுத்திய அதானி பவர்.. ஒரே நாளில் 9% ஏற்றம்..!

இந்த நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இது கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் நிகரலாபம் 3.88 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இதே முதல் காலாண்டில் 633 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இப்படி ஓரு நிலையில் தான் இரண்டாவது காலாண்டில் 3 மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, 2,228.05 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தான் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது, இன்று காலை தொடக்கத்திலேயே 5.77% அதிகரித்து 38.50 ரூபாயாக தொடங்கியது. இதன் பின்னர் இண்டிராடே வர்த்தகத்தில் 39.9 ரூபாயாக உச்சத்தினை தொட்டது. இது 9.62% ஏற்றமாகும். இதன் நேற்றைய முடிவு விலை 36.40 ரூபாயாகும். எனினும் இதே இண்டிராடே வர்த்தகத்தில் குறைந்தபட்சமாக 37.60 ரூபாயினையும் தொட்டது.

இதே அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது ஒரு வாரத்தில் 6 சதவீதம் ஏற்றம் கண்டும், இதே ஒரு மாதத்தில் 3% ஏற்றத்திலும் காணப்படுகிறது. இந்த பங்கின் விலையானது 5, 20, 50 மற்றும் 100 நாள் மூவிங் ஆவரேஜ்ஜிக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது. எனினும் 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜிக்கு கீழாகத் தான் வர்த்தகமாகி வருகின்றது.

இந்நிலையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 14,637.08 கோடி ரூபாயாகவும் இன்றைய சந்தை முடிவில் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வருவாய் 8,792.28 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6,815 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த செலவினம் 5,898.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 6,658.44 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவிற்கு மத்தியில் பலமான வளர்ச்சியினை கண்டுள்ள நிலையில், இதன் பங்கு விலை ஏற்றம் பெரும் ஆச்சரியத்தினை விஷயமல்ல என்றாலும், இதில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயமே.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+