அதானி கொடுத்த செம சான்ஸ்.. ஒரே வாரத்தில் 59%.. 1 வருடத்தில் 285%.. இது வேற லேவல் பெர்பார்மன்ஸ்..!

இந்தியாவின் முன்னணி குழும நிறுவனமான அதானி குழும பங்குகளின் விலையானது, கடந்த ஆண்டில் இருந்தே நல்ல ஏற்றத்தினைக் கண்டு வருகின்றன.

இதற்கிடையில் அதானி குழுமத்தில் உள்ள அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது, இன்று 52 வார உச்சத்தினை தொட்டு, பி.எஸ்.இ-யில் 152.25 ரூபாயை தொட்டுள்ளது.

இந்த பங்கின் விலையானது இன்று காலை தொடக்கத்திலேயே 5.5% ஏற்றம் கண்டு, 134 ரூபாயாக தொடங்கியது. இது முந்தைய அமர்வின் முடிவு விலையானது 126.95 ரூபாயாக முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

52 வார உச்சம்

52 வார உச்சம்

இதே அதானி பவர் நிறுவனத்தின் பங்கு விலையானது ஜூன் 1, 2021ல் பிஎஸ்இ-யில் 95.4 ரூபாயாக முடிவடைந்திருந்தது. இதற்கிடையில் இன்று காலை அமர்வில் இன்ட்ரா டே உச்சமாக 152.20 ரூபாயினையும் தொட்டுள்ளது. ஒரு வாரத்தில் இந்த பங்கின் விலையானது 58.8 லாபத்தினை கொடுத்துள்ளது.

எகிறிய சந்தை மதிப்பு

எகிறிய சந்தை மதிப்பு

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 58,563 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் பி.எஸ்.இ பவர் இன்டெக்ஸ் உச்சமானது 10 வருட உச்சத்தினை தொட்டு, 3,008 ரூபாயினை தொட்டுள்ளது. இதற்கிடையில் டாடா பவர் மற்றும் டோரண்ட் பவர் உள்ளிட்ட பங்குகள் தலா பி.எஸ்.இய்யில் 4% ஏற்றம் கண்டுள்ளன.

12 மாதங்களில் 285% மேல் ஏற்றம்

12 மாதங்களில் 285% மேல் ஏற்றம்

அதானி பவர் குழுமத்தின் பங்கு விலையானது 5 நாள் மூவிங் ஆவரேஜ், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. அதானி பவர் கடந்த 12 மாதங்களில் 285.6% ஏற்றத்தினை கண்டுள்ளது. இதே இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 198.5% ஏற்றம் கண்டுள்ளது.

லட்சாதிபதி தான்

லட்சாதிபதி தான்

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தோமானால், இன்று கிட்டதட்ட அது 4 லட்சங்களாகி இருக்கும். இதே கடந்த ஆண்டின் மார்ச் 2020ல் 27 ரூபாய் அருகில் வரை சென்று திரும்பியுள்ளது. இதன் 52 வார குறைந்தபட்ச விலையானது 34.35 ரூபாயாகும். இதே 52 வார உச்ச விலையானது 152.25 ரூபாயாகும்.

நஷ்டத்தில் இருந்து லாபம்

நஷ்டத்தில் இருந்து லாபம்

இது கடந்த ஆண்டு மார்ச் மாத குறைந்த விலையில் இருந்து பார்க்கும்போது, 6 மடங்குக்கு மேலாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் அனைத்து டெக்னிக்கல் வியூகங்களும் இன்னும் ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது. அதோடு மின்சார பயன்பாடும் அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் இந்த நிறுவனம் கடந்த மார்ச் காலாண்டில் 13.13 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. இதே மார்ச் 2020ல் இந்த நிறுவனம் 1312.86 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டு இருந்தது.

பிக் ரீலிப்

பிக் ரீலிப்

இதே கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் லாபம் 1269.98 கோடி ரூபாயினைக் கண்டுள்ளது. இதே 2019 - 20ம் ஆண்டில் 2,274.77 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டு இருந்தது. இதே கடந்த நிதியாண்டில் வருவாயும் 28,149.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 27,841.81 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேவை அதிகரிக்கும்

தேவை அதிகரிக்கும்

இதற்கிடையில் கேர் ரேட்டிங்க்ஸ் நிறுவனம் சமீபத்தில் தனது அறிக்கையில் மின்சார துறையானது, நடப்பு நிதியாண்டில் 5 - 75 வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. அதோடு மின்சார உற்பத்தி மற்றும் நுகர்வும் அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவனம் கணித்துள்ளது.

தெர்மல் பவர் உற்பத்தி

தெர்மல் பவர் உற்பத்தி

அதானி நிறுவனம் தற்போது குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடாகா, ராஜஸ்தான், சட்டிஷ்கர் உள்ளிட்ட பகுதிகளில் ஆறு பவர் பிளாண்டுகளை கொண்டுள்ளது. இந்த பிளான்ட்டுகளில் கேப்பாசிட்டி 12,410 மெகாவாட் ஆகும். அதானி பவர் இந்தியாவின் மிகப்பெரிய தெர்மல் பவர் உற்பத்தியினை செய்து வரும் மிகப்பெரிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தகக்து.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+