இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான அதானி குழுமம், பங்களாதேஷ்-ன் தற்காலிக அரசுக்கு 500 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எதற்காக பங்களாதேஷ் அரசு அதானி குழுமத்திற்குப் பணத்தைக் கொடுக்க வேண்டும்..?
அதானி குழுமத்தின் நிலுவைத் தொகை குறித்த எச்சரிக்கை, நோபல் பரிசு பெற்ற முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் நாட்டின் தற்காலிக அரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆட்சி மாற்றத்தால் ஏற்கனவே பல்வேறு பொருளாதார நெருக்கடி, நிதி நெருக்கடி, வர்த்தக மந்தநிலை என பல பிரச்சனைகளை பங்களாதேஷ் அரசு எதிர்கொண்டு இருக்கும் வேளையில், 500 மில்லியன் டாலர் கோரிக்கை அந்நாட்டு அரசுக்கு புதிய தலைவலியாக உருவெடுத்துள்ளது.

இந்தியாவில் உள்ள 1,600 MW திறன் கொண்ட கோடா நிலக்கரி மின்சார உற்பத்தி நிலையத்திலிருந்து, மின்சாரத்தை அதானி பவர் நிறுவனத்தின் பங்களாதேஷ் நாட்டிற்கு அளிக்கிறது. இதற்கான ஒப்பந்தம், அதானி குழுமத்திற்கும் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் தலைமையிலான அரசுக்கும் மத்தியில் கையெழுத்தானது.
இந்த ஒப்பந்தம் தற்போது பல விமர்சனங்களைச் சந்தித்தது வருகிறது, முகம்மது யூனுஸ் தலைமையிலான பங்களாதேஷ் நாட்டின் தற்காலிக அரசு, அதானி குழுமத்துடனான இந்த ஒப்பந்தம் மிகவும் காஸ்ட்லியான உள்கட்டமைப்பு திட்டமாக உள்ளது என கூறுகிறது.
இதனால் இந்த 500 மில்லியன் டாலர் நிலுவைத் தொகையைப் பெறுவதில் நிலையற்ற தன்மை உருவாகியுள்ளது என்று அதானி பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேவேளையில் பங்களாதேஷ் அரசின் தற்காலிக நிர்வாகத்துடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலுவைத் தொகை பிரச்சினை, பங்களாதேஷ் அரசின் நிதி நிலைமையைப் பாதிக்கிறது என்று அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷ் அரசு, உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்களின் நிதி உதவியை நாடி வரும் வேளையில் அதானி குழுமத்தின் 500 மில்லியன் டாலர் உண்மையிலேயே பெரும் தலைவலியாகப் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பங்களாதேஷ் அரசு, முந்தைய எனர்ஜி ஒப்பந்தங்களை மறுபரிசீலனை செய்யத் திட்டமிட்டுள்ளது. இந்த அரசு, இந்தியா மற்றும் சீனாவுடன் சமநிலையான உறவைப் பராமரிப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்த மும்முனை கூட்டணியில் வெளிப்படையான உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களை உருவாக்க முன்வந்துள்ளது.
பங்களாதேஷ் நாட்டின் மின்சாரம் தொடர்பான நிதிசுநை 3.7 பில்லியன் டாலராக உள்ளது. இதில் அதானிக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை மட்டுமே 492 மில்லியன் டாலராகும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications