இந்திய வர்த்தக துறையில் கடந்த 10-20 வருடத்தில் வேகமாக வளர்ச்சி அடைந்த ஒரு தொழிலதிபர் என்றால் அது கௌதம் அதானி தான். ஒரிரு துறை இல்லாமல் பல துறைகளில் வர்த்தகத்தை துவங்கி அதை வெற்றிகரமாக நடத்தி வருகிறது அதானி குழுமம். விமான நிலையம் முதல் கிரீன் எனர்ஜி வரையில் பல துறையில் தொடர்ந்து சாதனைகளை படைத்து வருகிறது.
இப்படியிருக்கையில் அதானி குழுமம் ரியல் எஸ்டேட் துறையிலும் தீவிரமாக முதலீடு செய்து வருகிறது. பங்குச்சந்தைகள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் முதலீட்டுக்கு ஏற்றதாக இல்லை என்பதால் முதலீட்டாளர்கள் தங்கம், கிரிப்டோ, ரியல் எஸ்டேட் ஆகிய துறைகளில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இதே பார்மூலாவை அதானி குழுமம் பாலோ செய்கிறது.

அதானி குழுமத்தின் சொத்து வளர்ச்சி பிரிவான அதானி பிராப்பர்டீஸ், சஹாரா குழுமத்தின் 87 சொத்துக்களை வாங்குவதற்கு உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் வெறும் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யாமல் ஹாஸ்பிடாலிட்டி துறையிலும் இறங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அதானி குழுமம் வரும் காலத்தில் டாடா, ஐடிசி போன்ற குழுமத்தின் ஹோட்டல் வர்த்தகத்துடனும் போட்டிப்போடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஹாரா குழுமம் ஒரு காலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமாக இருந்தது மட்டும் அல்லாமல் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக இருந்தது. நியூயார்க்கில் உள்ள பிளாசா ஹோட்டல் மற்றும் லண்டனில் உள்ள கிராஸ்வெனர் ஹவுஸ் போன்ற உலகப் புகழ்பெற்ற சொத்துக்களை வைத்திருந்த இந்த குழுமம், தற்போது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
சஹாரா குழுமம் சட்டவிரோதமான பத்திர முதலீட்டு திட்டம் மூலம் பணத்தை திரட்டி முதலீட்டாளர்களை மோசடி செய்தது. இந்த நிலையில் இதில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது சஹாரா குழுமம். சுமார் 2.82 பில்லியன் டாலர்கள் ரூபாய் மதிப்பில் சுமார் 25,000 கோடி ரூபாய் திருப்பி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த நிதியை திரட்டுவதற்காக ஹோட்டல்கள், ஷாப்பிங் சென்டர்கள் உள்ளிட்ட சொத்துக்களை விற்க முயற்சிக்கிறது சஹாரா குழுமம். மகாராஷ்டிராவில் உள்ள ஆம்பி வேலி உள்ளிட்ட முக்கிய சொத்துக்களும் இதில் அடங்கும். சஹாரா குழுமம் விற்க திட்டமிடும் சொத்து பட்டியலில் ஹோட்டல்கள், ஷாப்பிங் சென்டர்கள், அப்பார்ட்மென்ட்கள் மற்றும் அலுவலக கட்டிடங்கள் என பலதரப்பட்ட அசர்ட் போர்ட்போலியோ உள்ளது.
அதானி குழுமம் மின்சாரம், நிலக்கரி, துறைமுகம், சிமெண்ட், மீடியா உள்ளிட்ட பல துறைகளில் பெரிய அளவில் செயல்பட்டு வரும் நிலையில், இந்நிறுவனத்தின் ரியல் எஸ்டேட் துறை ஒப்பீட்டளவில் இன்னும் சிறிய அளவிலேயே உள்ளது. இதை மேம்படுத்தவே உச்ச நீதிமன்றத்தில் சஹாரா குழும சொத்துக்களை மொத்தமாக வாங்க அதானி குழுமம் விருப்பம் தெரிவித்துள்ளது.
சஹாரா குழுமம் எப்படி தனது பத்திர முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை செலுத்துகிறது என உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்தபோது, அதானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, அதானி பிராப்பர்டீஸ் சஹாராவுக்கு சொந்தமான அனைத்து 87 சொத்துக்களையும் வாங்க விருப்பம் தெரிவித்ததாகக் கூறினார்.
உச்சநீதிமன்றம் சஹாரா முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி செலுத்தும் விவகாரத்தை கண்காணித்து வரும் வேளையில் அதானி குழுமத்தின் இந்த விருப்பம் சஹாரா முதலீட்டாளர்களுக்கு விரைவான தீர்வு கிடைக்க வழிவக்கும். இதனால் இந்த விசாரணையில் ஒரு பகுதியாக உச்சநீதிமன்றம் அதானி குழுமத்தின் விருப்பம் குறித்து மத்திய அரசு, செபி (SEBI) உள்ளிட்ட அமைப்புகளின் கருத்துக்களை கேட்டுள்ளது.
சஹாரா குழுமம் இந்த சொத்துக்களை விற்க அனுமதி கோரியுள்ளது, மேலும் அதானி இந்த கோரிக்கையை ஆதரித்துள்ளது. இதனால் விரைவில் தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஹாரா குழுமத்திடம் ஏகப்பட்ட ஆடம்பர ரியல் எஸ்டேட் சொத்துக்கள் உள்ளது, இதில் இந்தியா முழுக பிரபலமானது அதேவேளையில் விலை உயர்ந்ததாக கருதப்படும் சொத்து மும்பையில் சுமார் 9000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள AMBY VALLEY. இதில் விமான ஓடுதளம், காஃல்ப், குளம், ஆடம்பர வில்லா என பெரும் பணக்காரர்களுக்கு தேவையான அனைத்து விஷயங்களும் ஒருசேர அமைந்துள்ளது.
மேலும் இதே Adani Properties நிறுவனம் தான் தற்போது மும்பை தாராவி பகுதியை மறுசீரமைப்பு செய்து வருகிறது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications