இந்தியாவில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளிக்கொடுத்து வந்த அதானி குழுமம் புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது.
அதானி குழுமத்தை சேர்ந்த 10 நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் உள்ளது. அதானி டேட்டல் கேஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன், அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி பவர், அதானி வில்மார், NDTV, அதானி போர்ட்ஸ் அண்ட் SEZ, ஏசிசி லிமிடெட், அம்புஜா சிமெண்ட்ஸ்.
இன்றைய வர்த்தகத்தில் ஒட்டுமொத்த 10 நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது ஓரே நாளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே மோசமான நிலைக்கு முக்கியக் காரணம் Hindenburg என்னும் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை தான்.
அனைத்தும் பொய்
அதானி குழுமம் Hindenburg அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது அனைத்தும் பொய், அடிப்படை ஆதாரம் இல்லாமல் வெளியிட்ட அறிக்கை என 2 நாட்களாகக் கூறி வரும் வேளையில், இன்று Hindenburg நிறுவனத்தின் மீது வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
89 கேள்விகள்
இதுமட்டுமா Hindenburg அறிக்கையில் அதானி குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து எழுப்பப்பட்ட 89 கேள்விகளுக்கும் இன்று வரிக்கு வரி விளக்கம் கொடுத்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த மிகப்பெரிய விளக்க அறிக்கையை வெளியிட்டு உள்ளது.
ஜுகேஷிந்தர் சிங்
Hindenburg Research, எங்களைத் தொடர்பு கொள்ளவோ அல்லது உண்மை சரிபார்க்கவோ எந்த முயற்சியும் செய்யாமல், ஜனவரி 24, 2023 அன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது அதிர்ச்சியளிக்கிறது என்று அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.
அதானி போர்ட்ஃபோலியோ பிரசன்டேஷன்
தற்போது எழுப்பப்பட்டு உள்ள 89 கேள்விகளில் 21 கேள்விகளுக்குப் பொது வெளியீடாக வந்துள்ள 2015 அதானி போர்ட்ஃபோலியோ பிரசன்டேஷன் அறிகையில் பதில் அளிக்கப்பட்டு உள்ளது. ஹிண்டன்பேர்க் செய்த கணக்கியல் அல்லது மோசடி குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஹிண்டன்பேர்க் அறிக்கை
மேலும் அமெரிக்கச் சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பேர்க் அறிக்கை அதானி குழுமத்திற்குத் தீங்கிழைக்கும் நோக்கம் கொண்டது என்றும், தனது அறிக்கையில் ஒன்றை விட்டு ஒன்றைக் காட்டும் தவறான தகவல்களைக் கொண்டது என்றும் அதானி குழுமம் கூறியுள்ளது.
குறுகிய காலப் பங்கு விற்பனை
ஹிண்டன்பேர்க் நிறுவனம் என்பது குறுகிய காலப் பங்கு விற்பனையில் தனித் திறன் பெற்றது. அதாவது ஒரு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை குறையும் என்று எதிர்பார்த்து அதற்காகப் பிட்டிங் செய்யு பணம் சம்பாதிப்பதில் கெட்டிக்கார நிறுவனம்.
அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பில் பாதிப்பு மூலம் ஹிண்டன்பர்க் நிறுவனம் பலன் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடிகள்
இதேபோல் ஹிண்டன்பேர்க் நிதியியல் சந்தையில் மனிதர்களால் செய்யப்படும் மோசடிகளைக் கண்டுபிடித்து, அதை அடிப்படையாக வைத்து அறிக்கை வெளியிட்டு ஷாட் செல்லிங் செய்து பணம் சம்பாதிக்கும் திறன் கொண்டவை இதுவரை 16 நிறுவனங்கள் குறித்து அறிக்கை வெளியிட்டு பெரும் தொகையைச் சம்பாதித்துள்ளது.
மிகப்பெரிய மோசடி
அதானி குழுமம் கார்ப்பரேட் வரலாற்றிலேயே நடந்திராத மிகப்பெரிய மோசடியை செய்துள்ளது என்று குற்றம்சாட்டி உள்ளது ஹிண்டன்பர்க். அதானி குழுமத்தின் பங்குகளை FPO கீழ் விற்பனை செய்வதற்குச் சில நாட்களுக்கு முன்னதாக இந்த அறிக்கை வெளிவந்தது பெரும் பின்னடைவாக உள்ளது.
மொரிஷியஸ்
மொரிஷியஸ் போன்ற கடல் கடந்த வரிச் சலுகைகள் அதிகமாக இருக்கும் இடங்களில் அதானி குழுமத்திற்குச் சொந்தமாக வைத்துள்ள நிறுவனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளது மட்டும் அல்லாமல் அதன் மூலம் பல முறைகேடுகள் செய்துள்ளதாக ஹிண்டன்பர்க் அறிக்கை தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை பதில்
அதானி குழுமம் இந்தியாவிலும், அமெரிக்காவிலும் ஹிண்டன்பேர்க் நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுக்க உள்ளதாக அறிவித்த நிலையில், ஹிண்டன்பர்க் நிறுவனம் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எவ்விதமான பதிலும் தெளிவாகவும், தங்கு ஆதாரங்கள் உடன் பதில் அளிக்கவில்லை என வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
வழக்கு எதிர்கொள்ளத் தயார்
ஹிண்டன்பர்க் வியாழக்கிழமை அளித்த பதிலில் தங்களது அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்துத் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் தங்களுக்கு எதிரான இந்தப் புகாருக்கும் அடிப்படை இருக்காது என்பதால் சட்ட நடவடிக்கைகளை வரவேற்பதாகவும் அதானி நிறுவனத்தின் மூக்கை உடைத்துள்ளது ஹிண்டன்பர்க்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications