அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், அதானி குழுமம் குறித்து வெளியிட்ட அறிக்கையின் மீது இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் ஜூலை 1 ஆம் தேதி தனது இணையதளத்தில் அதிரடியாகவும் காட்டமாகவும் விளக்கம் கொடுத்தது.
செபி அமைப்பு 46 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் விளக்கம் கேட்டு நோட்டீஸை கடந்த ஜூன் 27 ஆம் தேதி அனுப்பியுள்ளதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது. முதலில் நாங்கள் இதை ஏதோ ஒரு phishing முயற்சி என்று தான் நினைத்தோம், ஆனால் அதேநாளில் மற்றொரு ஷோகாஸ் நோட்டீஸ் செபியிடம் இருந்து வந்தது என ஹிண்டன்பர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று இந்த நோட்டீஸ்-ஐ முழுமையாகவும், வெளிப்படையாகவும் நாங்கள் பகிர்கிறோம், ஏனெனில் இது முட்டாள்தனம் என்று நாங்கள் கருதுகிறோம். இந்த நோட்டீஸ் ஒரு திட்டமிடப்பட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது: இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் செய்த ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதியாக்கும் மற்றும் மிரட்டும் முயற்சி இது என ஹிண்டன்பெர்க் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் குறித்து எங்களுடைய 106-பக்கங்கள் அறிக்கையில், 32,000 சொற்களும் மற்றும் 720 மேற்கோள்களை உள்ளடக்கியது. இந்த அறிக்கையில் அதானி "பல தசாப்தங்களாக ஒரு மோசமான பங்கு கையாளுதல் மற்றும் கணக்கு மோசடி திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்" என்பதற்கான ஆதாரங்களையும், போலியான வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் கௌதம் அதானியின் சகோதரர் வினோத் அதானி மற்றும் அவர்களுடைய கூட்டாளிகள் எப்படியெல்லாம் பல பில்லியன் டாலர் தொகையை திருட்டுத்தனமாக கைமாற்றுகிறார்கள் என்பதற்கான விபரத்தைத் தொகுத்து ஜனவரி 2023ல் வெளியிட்டோம்.
இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு உத்தரவிட்டது, அதேவேளையில் அதானி போர்ட் நிறுவனத்தின் ஆடிட்டராக இருந்த BIG 4 நிறுவனம் டெலாய்ட் ஆகஸ்ட் 2023ல் எங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்ட ஒரு முறையற்ற பரிமாற்றத்தை சுட்டிக்காட்டி விலகியது.
எங்களுடைய 106 பக்க அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து குறைந்தது 40 இண்டிபென்டன்ட் ஊடக விசாரணைகள் எங்கள் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியது அல்லது விளக்கியுள்ளது என்று ஹிண்டன்பெர்க் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று வரையில் அதானி குழுமம் எங்களுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முறையாக விளக்கம் கொடுக்கவில்லை. இதைவிட்டு மொத்தமாக நாங்கள் மறுக்கிறோம் எனவும், குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்பற்ற விஷயங்களை அறிக்கையாக வெளியிட்டு வருகிறது.

அதானி குழுமம் போல் போலி முதலீட்டு வலையமைப்பின் மூலம் அதிகப்படியான பங்கு இருப்புகளை வைத்துக்கொண்டு, பங்கு விலையை உயர்த்தி மோசடி செய்யும், அதே வேளையில் பொது நிறுவனங்கள் மூலம் பில்லியன் கணக்கான டாலர்கள் போலி நிறுவனங்களுக்குப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் ஒரு வெளிநாட்டு ஷெல் நிறுவன சாம்ராஜ்யத்தை நடத்தும் மோசடியாளர்கள் மீது தான் செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும். என ஒருவர் நினைக்கலாம்.
ஆனால் இங்கு மாறாக, செபி இத்தகைய மோசடி நடைமுறைகளை வெளியுலகத்திற்கு கொண்டு வருபவர்கள் மீது அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது. இந்த நிலைப்பாடு, அதானியைப் பற்றி விமர்சனம் செய்து கட்டுரைகளை எழுதியதற்காக 4 பத்திரிகையாளர்களைக் கைது செய்ய இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையும் ஒத்துப்போகிறது. இதேபோல் அதானியை விமர்சித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர் என ஹிண்டன்பெர்க் தனது அறிக்கையில் தெரித்துள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications