அமெரிக்காவின் பிரபல "ஷார்ட் செல்லர்" நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பங்குச்சந்தை மோசடி மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் மூலம் அதானி குழுமத்தை உலுக்கியது. இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட் உத்தரவின் படி இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி கடந்த 1.5 வருடமாக விசாரணை செய்தது.
இந்த நிலையில் செபி தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை நேரில் வந்து ஆஜராகும் படி ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இது தொடர்பாக ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அமெரிக்க நேரப்படி ஜூலை 1 ஆம் தேதி தனது இணையத்தில் நீண்ட நெடிய பதிவை செய்துள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிவில் செபி அனுப்பியுள்ள 46 பக்க நோட்டீஸ், அதானி பங்குகளை ஷாட் செய்ததற்காக எங்களிடம் விளக்கம் கேட்டுள்ளது. நாங்கள் ஒரு முதலீட்டு பங்குதாரருடனான (investor partner) ஒப்பந்தம் வாயிலாகவே அதானி பங்குகளை ஷாட் செய்தோம்.
இந்த முதலீட்டு பங்குதாரர், இந்தியாவைச் சார்ந்தவர் அல்ல, இவர் வெளிநாட்டு நிதி அமைப்பின் கீழ் கணக்கை வைத்திருந்தார். இந்த கட்டமைப்பின் கீழ் தான் அதானி பங்குகள் ஷாட் செய்யப்பட்டது, எனவே ஹிண்டன்பர்க் நேரடியாக அதானி பங்குகளில் ஷாட் செய்யவில்லை என செபிக்கு மட்டும் அல்லாமல் மொத்த உலகிற்கும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் தனது பதிவின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளது.
கோடக் மகிந்திரா வங்கியின் உருவாக்கிய ஒரு ஆப்ஷோர் பண்ட் கணக்கை தான் எங்களுடைய முதலீட்டு பார்ட்னர் பயன்படுத்தினார். உதய் கோடாக் தலைமையிலான கோடக் வங்கி தான் இந்த கணக்கை உருவாக்கி, நிர்வாகம் செய்தது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதானி குழுமத்தின் பங்குகள் மீது ஷாட் செய்தது மூலம் லாபம் ஈட்டியதாகவும் ஹிண்டன்பர்க் ஒப்புக் கொண்டுள்ளது. ஜனவரி 2023ல் அதானி குழுமம் குறித்து முதல் முறையாக அறிக்கை வெளியிட்டபோதே நாங்கள் அதானி பங்குகளை ஷாட் செய்துள்ளோம் என பகிரங்கமாக அறிவித்தது.

இந்த நிலையில் முதலீட்டு பங்குதாரர் உடனான ஹிண்டன்பெர்க் ரிசர்ச் செய்ய ஷாட்டிங் மூலம் 4.1 மில்லியன் டாலர் மொத்த வருவாய் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது. ஆனால், அதானி நிறுவனத்தின் அமெரிக்க பத்திரங்களில் தாங்கள் நேரடியாக வைத்திருந்த ஷாட்டிங் பெட் மூலம் வெறும் 31,000 டாலர் மட்டுமே லாபம் ஈட்டியுள்ளதாகக் கூறியுள்ளது.
ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையைத் தொடர்ந்து, அந்நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஹிண்டன்பர்க் தனது வலைப்பதிவில், "இந்த நோட்டீஸ், இந்தியாவில் உள்ள மிக சக்தி வாய்ந்த நபர்களால் செய்யப்படும் ஊழல் மற்றும் மோசடிகளை வெளிப்படுத்தும் முயற்சிகளை அழுத்தவும், மிரட்டுவதற்குமான முயற்சி" என்று குற்றம் சாட்டியுள்ளது.
ஜனவரி 2023 இல் வெளியிடப்பட்ட ஹிண்டன்பர்க் அறிக்கையில், அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செபியின் விதிமீறல், முறைகேடான நிதி பரிமாற்றம், பங்கு விலையை திட்டமிட்டு விதிகளை மீறி மறைமுகமாக உயர்த்துவது ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்த அறிக்கையின் எதிரொலியாக அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு பல பில்லியன் டாலர் அளவில் சரிந்தது. மேலும், இந்திய பங்குச் சந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications