இன்று அதானி - ஹூண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் தொடர்பாகக் குவிந்த பல்வேறு மனுக்களின் விசாரித்துத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்க உள்ளது. இதன் எதிரொலியாக இன்று அதானி குழும பங்குகள் 15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச், அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், "கார்ப்பரேட் வரலாற்றில் மிகப் பெரிய மோசடி" என்ற வகையில் அதானி குழுமம் செய்த பல்வேறு தவறுகளைத் தொகுத்து வெளியிட்ட நிலையில் செபியின் விசாரணை முடிவுகளை ஆய்வு செய்து இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிவிப்பைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு சுமார் 15 பில்லியன் டாலர் வரையில் சந்தித்தது மறக்க முடியாது. இந்தச் சரிவின் மூலம் சாமானிய ரீடைல் முதலீட்டாளர்கள் இழப்பை எதிர்கொண்ட நிலையில் உச்ச நீதிமன்ற செபி-க்கு அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்டது.
சுமார் 24 குற்றச்சாட்டுகளில் 22ன் விசாரணையை முடித்துச் செபி தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் வேளையில், கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ஹிண்டன்பெர்க் ரிசர்ச் முன்வைத்த குற்றச்சாட்டுகளை உண்மை எனக் கருதுவதை விட, செபி அமைப்பின் விசாரணையின் முடிவுகள் தான் இறுதி மற்றும் முக்கியம் என்ற வகையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு மிகவும் சாதகமாக முதலீட்டாளர்கள் பார்த்த நிலையில், இன்று அதானி - ஹூண்டன்பர்க் ரிசர்ச் விவகாரம் தொடர்பாகக் குவிந்த பல்வேறு மனுக்களின் விசாரித்துத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு வழங்க உள்ளது. இதன் வாயிலாக இன்று அதானி குழும பங்குகள் 15 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
அதானி எண்டர்பிரைசஸ் - 6.68 சதவீதம் உயர்வு
அதானி போர்ட்ஸ் & SEZ - 3.56 சதவீதம் உயர்வு
அதானி பவர் - 4.87 சதவீதம் உயர்வு
அதானி எனர்ஜி சொல்யூஷன் - 14.39 சதவீதம் உயர்வு (முன்பு இதன் பெயர் அதானி டிரான்ஸ்மிஷன்)
அதானி கிரீன் எனர்ஜி - 7.26 சதவீதம் உயர்வு
அதானி டோட்டல் கேஸ் - 10.00 சதவீதம் உயர்வு
அதானி வில்மார் - 6.82 சதவீதம் உயர்வு
ஏசிசி லிமிடெட் - 2.08 சதவீதம் உயர்வு
அம்புஜா சிமெண்ட்ஸ் - 3.00 சதவீதம் உயர்வு
NDTV - 9.88 சதவீதம் உயர்வு


Click it and Unblock the Notifications