இந்தியாவின் மிகமுக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான கெளதம் அதானி தனது அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ நிறுவனத்தின் வாயிலாக ஆந்திராவில் சுமார் 13, 000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஒரு தனியார் துறைமுகத்தைக் கைப்பற்ற முடிவு செய்துள்ளார்.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் பல துறைமுகங்கள் இருக்கும் நிலையில் புதிதாக முதலீடு செய்து தனது வர்த்தகம் மற்றும் ஆதிக்கத்தை இத்துறையில் மேம்படுத்த முடிவு செய்துள்ளார் அதானி.
கிருஷ்ணபட்டனம் துறைமுகம்
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் கிருஷ்ணபட்டனம் போர்ட் கோ. லிமிடெட் என்னும் தனியார் துறைமுக நிறுவனத்தின் 75 சதவீத பங்குகளைச் சுமார் 13, 500 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக அதானி போர்ட்ஸ் மற்றும் SEZ மற்றும் KPCL என்கிற கிருஷ்ணபட்டனம் போர்ட் கோ. லிமிடெட் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்துள்ளது.
54 மில்லியன் டன்
தென் ஆந்திர பகுதியில் அமைந்திருக்கும் கிருஷ்ணபட்டனம் போர்ட் கோ. லிமிடெட் நிறுவனத்தின் துறைமுகம் வருடத்திற்குச் சுமார் 54 மில்லியன் டன் சரக்குகளை விநியோகம் செய்து வருகிறது.தென் ஆந்திர பகுதியில் அமைந்திருக்கும் கிருஷ்ணபட்டனம் போர்ட் கோ. லிமிடெட் நிறுவனத்தின் துறைமுகம் வருடத்திற்குச் சுமார் 54 மில்லியன் டன் சரக்குகளை விநியோகம் செய்து வருகிறது.
400 மில்லியன் டன்
அதானி போர்ட்ஸ் நிறுவனம் வருகிற 2025ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் டன் அளவிலான சரக்கு போக்குவரத்தும் செய்யும் அளவிற்குத் துறைமுகத் தளத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு உள்ள நிலையில், தற்போது அதிகளவிலான முதலீட்டில் நாடு முழுவதும் துறைமுகங்களை வாங்க திட்டமிட்டுள்ளது அதானி போர்ட்ஸ்
மேலும் இந்தக் கைப்பற்றலுக்குத் தேவையான நிதியைத் தனது நிறுவனங்கள் உள் நிதிகள் மூலமும், தற்போது இருக்கும் நிதி இருப்பையும் வைத்துச் செய்ய உள்ளதாகவும் அதானி போர்ட்ஸ் தெரிவித்துள்ளது.
120 நாள்
75 சதவீத பங்குகளைக் கைப்பற்றுவதற்கான ஒப்புதல்கள் இரு தரப்பும் கொடுத்துவிட்ட நிலையிலும், இந்த டீலை அரசு துறைமுகக் கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதனால் இன்னும் 120 நாட்களுக்குள் இந்த ஒப்புந்தம் இறுதி கட்டத்தை அடைந்துவிடும் எனத் தெரிகிறது.
இதன் பின்பு தான் நிதி பரிமாற்றங்கள் நடைபெறும் எனவும் தெரிகிறது.
ஸ்னோமென் லாஜிஸ்டிக்ஸ்
10 நாட்களுக்கு முன்பாக அதானி போர்ட்ஸ் ஸ்னோமென் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் 40.25 சதவீத பங்குகளை 296 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக அறிவித்தது. இந்நிலையில் கிருஷ்ணபட்டணம் துறைமுகத்தை 13, 500 கோடி ரூபாய் முதலீட்டுச் செய்து 75 சதவீத பங்குகளைக் கைப்பற்ற உள்ளது. இந்தச் செய்து இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு மகழ்ச்சியான செய்தியாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications