நம் நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால் அது அரசுக்கு நிதி அடிப்படையில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இதனால் கச்சா எண்ணெய் இறக்கமதி செலவினத்தை குறைக்கும் நோக்கில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு, இயற்கை எரிவாயுடன் பசுமை ஹைட்ரஜன் கலப்பு போன்ற நடவடிக்கைகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் ஒரு ஆண்டு 50 லட்சம் டன் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பசுமை ஹைட்ரஜன் என்றால் என்ன? : சூரிய அல்லது காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி நீரின் மூலக்கூறுகளை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த செயலின்போது ஹைட்ரஜன் மட்டும் கைப்பற்றப்பட்டு எரிபொருளாக பயன்படுத்துவதற்காக சேமிக்கப்படுகிறது. இதுதான் பசுமை ஹைட்ரஜன். ஆக்ஸிஜன் வளிமண்டலத்தில் வெளியிடப்படுகிறது.
அதானி டோட்டல் கேஸ் லிமிடெட் நிறுவனம் அண்மையில் அகமதாபாத்தில் நகர எரிவாயு விநியோகத்தில், மாற்று எரிசக்தி ஆதாரமாக தனது பசுமை ஹைட்ரஜன் கலப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
அகமதாபாத் நகரத்தில் உள்ள 4,000 வீடு மற்றும் வணிக பி.என்.ஜி. வாடிக்கையாளர்களுக்கு பசுமை ஹைட்ரஜனை இயற்கை எரிவாயுடன் கலந்து விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஹைட்ரஜன் கலவையானது எரிவாயுவை விட குறைவான கார்பன் செறிவு மற்றும் அதே வெப்ப திறன்களை கொண்டுள்ளது.
அதானி டோட்டல் கேஸின் இந்த மெகா திட்டம் அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (2024 ஏப்ரல்-ஜூன்) செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒழுங்குமுறை ஒப்புதல்களை பொறுத்து, இயற்கை எரிவாயுவில் பசுமை ஹைட்ரஜன் கலப்பு விகிதம் படிப்படியாக 8 சதவீதம் அல்லது அதற்கும் அதிகமாக அதிகரிப்படும் என தகவல்.
இந்த மெகா திட்டம் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்தும், எரிசக்தி கலவையை பல்வகைப்படுத்துகிறது மற்றும் ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது மற்றும் கார்பன் டை ஆக்சைடு (co2) உமிழ்வை 4 சதவீதம் வரை குறைக்கும் என்று அதானி டோட்டல் கேஸ் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் பி மங்லானி பேட்டி ஒன்றில், இந்த மெகா திட்டம் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும் மற்றும் இதுபோன்ற புதுமையான திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் நிறுவனம் தொழில்துறையின் பரிணாம வளர்ச்சிக்கு தீவிரவமாக பங்களித்து, நிலையான எரிசக்தி தீர்வுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்து இருந்தார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications