கௌதம் அதானி தலைமையிலான அதானி டோட்டல் கேஸ் மத்திய அரசு புதிய எரிவாயு கணக்கீட்டு பார்முலா-வை நடைமுறைப்படுத்தியதன் வாயிலாக தனது சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலையை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு மூலம் சிஎன்ஜி வாகனங்களை பயன்படுத்துவோருக்கும் பைப் வாயிலாக எரிவாயு இணைப்பை கொண்டவர்களின் செலவுகள் குறைய உள்ளது.

அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தனது சிஎன்ஜி விலையை ஒரு கிலோவிற்கு 8.13 ரூபாயும், பிஎன்ஜி விலையை ஒரு கிலோவிற்கு 5.06 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது சிஎன்ஜி, பிஎன்ஜி நுகர்வோருக்கு பெரிய அளவில் பலன் அளிக்கும்.
மத்திய அரசின் கணக்கீட்டு முறையை மாற்றிய பின்பு அரசு நிறுவனமான GAIL நிறுவனத்தின் கிளை நிறுவனமான மகாநகர் கேஸ் லிமிடெட் நிறுவனத்தை தொடர்ந்து அதானி டோட்டல் கேஸ் நிறுவனமும் விலையை குறைத்துள்ளது. இந்த விலை சனிக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் மிகப்பெரிய சிஎன்ஜி, பிஎன்ஜி சப்ளை நிறுவனமாக இருக்கும் அதானி டோட்டல் கேஸ் நிறுவனம் 7 லட்சம் வீடுகளுக்கும், 4000 வர்த்தக அமைப்புகளுக்கும், 2000 தொழிற்துறை நிறுவனங்களை பிஎன்ஜி வாடிக்கையாளர்களாக கொண்டு உள்ளது. இதோடு இந்தியா முழுவதும் 460 சிஎன்ஜி ஸ்டேஷன்கள் மூலம் சுமார் 3 லட்சம் வாடிக்கையாளர்களை இப்பிரிவில் கொண்டு உள்ளது.
GAIL நிறுவனத்தின் கிளை நிறுவனமான மகாநகர் கேஸ் நிறுவனமும் சிஎன்ஜி விலையை 8 ரூபாயும், பிஎன்ஜி விலையை 5 ரூபாயும் குறைத்துள்ளது. மகாநகர் கேஸ் நிறவனம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் மும்பையில் வைத்துள்ளது. இப்படி இரு்தாலும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை ஒப்பிடுகையில் தற்போது விலை கிட்டத்தட்ட 80 சதவீதம் அதிகமாக தான் உள்ளது.

இந்தியாவில் எரிவாயு விலையை அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யா போன்ற உபரி நாடுகளில் எரிவாயு விலை அடிப்படையில் நிர்ணயம் செய்வதற்குப் பதிலாக, APM எரிவாயு விலையை இப்போது கச்சா எண்ணெய் விலையுடன் இன்டெக்ஸ் செய்யப்படும். இதன் மூலம் ஏப்ரல் 1 முதல், இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்-யின் விலையில் 10 சதவீதமாக ஏபிஎம் எரிவாயு விலை நிர்ணயம் செய்யப்படும் என்று மத்திய ஐ&பி அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications