அதானி குழுமம் குறித்து ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் பல கேள்விகள் உடன் முன் வைக்கப்பட்ட தணிக்கையாளர் நிறுவனமான ஷா தன்தாரியா & கோ, அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.
சுப்ரீம் கோர்ட் ஆணையின் படி செபி மற்றும் சிறப்பு குழு அதானி குழுமம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வரும் வேளையில் அதானி குழுமத்தை தொடர்புடைய அதிகப்படியான விமர்சனங்களை எதிர்கொண்ட தணிக்கையாளர் நிறுவனமான ஷா தன்தாரியா & கோ விலகியுள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஆனால் தணிக்கையாளர் நிறுவனமான ஷா தன்தாரியா & கோ அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் பொறுப்பில் இருந்து விலக காரணத்தையும் தெரிவித்துள்ளது. Professional Pre-occupation காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளது, இதற்கான விளக்கம் - ஒரு தணிக்கையாளர் நிறுவனம் பிற முக்கியமான பணிகளில் பிசியாக இருக்கும் காரணத்தால் குறிப்பிட்ட நிறுவனத்தின் மீது அதிக கவனம் செலுத்த முடியாது என்பதாகும்.
ஷா தன்தாரியா & கோ, அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் பொறுப்பில் 5 வருட காலத்திற்கு ஜூலை 26, 2022 ஆம் தேதி நியமிக்கப்பட்டது, ஆனால் ஒரு வருடத்திற்குள்ளேயே அதுவும் ஹிண்டன்பர்க் அறிக்கையில் இடம்பெற்று 4 மாதத்திற்குள் இப்பொறுப்பில் இருந்து விலகியுள்ளது.
ஷா தன்தாரியா & கோ தற்போது அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் பொறுப்பில் மட்டுமே விலகியுள்ளது, அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ்-ன் ஆடிட்டராக தொடர்ந்து இருக்கும் என தெரிகிறாது. அதானி எண்டர்பிரைசஸ் குறித்து எவ்விதமான அறிவிப்பும் வெளியாவில்லை.

அமெரிக்காவின் முன்னணி ஷார்ட் செல்லர் நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் ஜனவரி 24 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அதானி குழுமம் சந்தை பங்குகளை கையாளுதல் மற்றும் அதிக அளவிலான பாதுகாப்பற்ற கடன் ஆகியவற்றுடன் கணக்கு மோசடிகளை குற்றம் சாட்டியது. இந்த அறிக்கையில் தணிக்கையாளர் நிறுவனமான ஷா தன்தாரியா & கோ பெயர் முக்கிய கேள்விகள் உடன் இடம்பெற்றுள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கையில் ஷா தன்தாரியா & கோ நிறுவனம் மூலம் அதானி குழுமம் முறைகேடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியது. இதற்கு காரணமாக இந்த ஆட்டிட்டர் நிறுவனத்தில் 4 பார்ட்னர்ஸ் மற்றும் 11 பணியாளர்கள் மட்டுமே இருப்பதாகவும். இந்நிறுவனத்தின் சில ஊழியர்கள் வெறும் 23-24 வயதுக்குட்பட்டவர்கள். அதே சமயம் நிறுவனத்தின் நிதியியல் அறிக்கையில் கையெழுத்திட்ட பார்ட்னர்-க்கு வெறும் 28 வயது மட்டுமே என குறிப்பிட்டு உள்ளது.
ஷா தன்தாரியா & கோ நிறுவனத்தின் 4 பார்ட்ன்ர்களில் - CA பிரவின் தன்தாரியா (46), CA ஹர்ஷில் ஷா (27), சிஏ ஷுபம் ரோஹத்கி (28), சிஏ அங்கித் அஜ்மேரா (28) ஆகியோர் உள்ளனர். மேலும்
ஷா தன்தாரியா & கோ தற்போது அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தின் சட்டப்பூர்வ தணிக்கையாளர் பொறுப்பில் மட்டுமே விலகிய நிலையில் ஷா தன்தாரியா & கோ நிறுவனத்திற்குப் பதிலாக வால்டர் சண்டியோக் & கோ நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஆடிட்டராக ஷா தன்தாரியா நிறுவனம் தொடர்ந்து நீடிக்குமான என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அதானி குழுமத்தின் முக்கிய இயக்குநர்கள் குழு கூட்டம் மே 4 அன்று கூட உள்ள நிலையில் இதில் முடிவு செய்யப்பட உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications